இந்திய அரசாங்கம் உலக சுகாதார மையத்தின் (WHO) Framework Convention on Tobacco Control (FCTC) - 2002 என்ற உடன்படிக்கையில்
2003 ஆம் ஆண்டு கையெழுத்திட்டது. அதன்படி 2006 ஆண்டு முதல் இந்தியாவில் விற்கப்படும் சிகரட், பீடி உட்பட அனைத்து புகையிலை
பொருட்களில் எச்சரிக்கை படங்கள் (PICTORIAL WARNINGS) அச்சிடப்படவேண்டும். எனினும் புகையிலை நிறுவனங்களின் எதிர்ப்பினால் நிலுவையிலேயே அந்த அறிவிப்பு
இருந்தது.
தன்னார்வ நிறுவனங்களின் தொடர் முயற்சியால் 2008 அம் ஆண்டு Cigarette and Other Tobacco Products (Packing and Labelling) Rules
2008 என்ற சட்டம் நிறைவேற்றபட்டது. 2009 மே 31 முதல் அது அமுலுக்கும் வந்தது. அதன்படி அன்று முதல் விற்கப்படும் எல்லா சிகரட்
பெட்டிகளிலும் கண்டிப்பாக - 40 சதவீத இடத்தில - புற்று நோயால் பாதிக்கப்பட்ட நுரையீரல் படத்தினையும், எல்லா பீடி அட்டையிலும் கண்டிப்பாக - தேள் - படத்தினையும் அச்சிட்டே விற்கப்படவேண்டும்.
தயாரிப்பாளர்கள் விரும்பினால் மண்டை ஓடு அல்லது புற்று நோயால் பாதிக்கப்பட்ட வாயினை காண்பிக்கலாம் என்றும் விதிகள் உள்ளது . மீறினால் புகைப்பொருள் தயாரிப்பாளருக்கு ரூபாய் 5000 அபராதமும் அல்லது 2 வருட சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்றும், புகைப்பொருள் விற்ப்பவருக்கு ரூபாய் 1000 அபராதமும் அல்லது 1 வருட சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்றும் விதிகள் போடப்பட்டுள்ளன.
எனினும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தற்போதைய படம் (பாதிக்கப்பட்ட நுரையீரல்) போதுமானதாக இல்லை என்றும் அதை விட
அச்சமூட்டும் படங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் ஆய்வுகள் அடிப்படையில் கருத்துக்கள் தெரிவித்தன.
அதனை தொடர்ந்து அச்சுறுத்தும் வகையில் வேறு படங்கள் அச்சிடப்பட்ட வேண்டும் என்றும், வருடத்திற்கு ஒரு முறை அவை மாற்றப்படவேண்டும்
என்றும் இந்திய அரசு இவ்வருடம் மார்ச் மாதம் புது உத்தரவு பிறப்பித்தது. இப்புது விதிமுறைகள் ஜூன் மாதம் முதல் தேதியன்று அமுலுக்கு வரும்
என்றும் அறிவித்தது.
எனினும் புகைபொருட்கள் தயாரிப்பாளர்கள் எதிர்ப்பின் காரணமாக இது டிசம்பர் 1 வரை தள்ளி வைக்கப்பட்டது. ஆகவே புதிய படங்களுடன்
புகைபொருட்கள் வரும் புதன்கிழமை முதல் விற்பனைக்கு வரவேண்டும்.
இந்தியாவில் தினமும் சராசரியாக புகை பழக்கத்தினால் சுமார் 2 ,200 பேர் உயிர் இழக்கின்றனர். மேலும் 15 - 49 வயது குழுமத்தில் உள்ள 57
சதவீத
ஆண்களும், 10 சதவீத பெண்களும் புகை பழக்கத்திற்கு அடிமையாக உள்ளதாக 2005 ஆம் ஆண்டு தேசிய குடும்ப சுகாதார ஆய்வு புள்ளி விபரங்கள்
தெரிவிக்கின்றன.
|