நவம்பர் 27 அன்று மாலை ஹாங்காங்கில் உள்ள இந்தியன் முஸ்லிம் அசோசியேசன் சார்பாக பெருநாள் ஒன்று கூடல் நிகழ்ச்சி - கோங்டாங் ஹோட்டலில் வைத்து
- நடைபெற்றது. இதில் ஹாங்காங்-வாழ் காயலர் திரளாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் துவக்கமாக ஹாபிழ் முஹைதீன் கிராஅத் ஓதினார். வரவேற்புரையை தொடர்ந்து கேள்வி-பதில் போட்டிகள் நடைபெற்றது. இதில் சிறுவர், சிறுமியர் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
இரவு உணவுக்குப்பின் கேள்வி-பதில் போட்டிக்கான பரிசளிப்பு மற்றும் குலுக்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.
முதல் பரிசான உம்ரா பயண டிக்கட்டை Easy Exchange Limited நிறுவனம் வழங்கியது. இரண்டாம் பரிசான தங்க வைர மோதிரம் DIASQUA நிறுவனம் வழங்கியது. மூன்றாம் பரிசாக SONY DIGITAL CAMERA WITH MEMORY CARD - United Asia Exchange நிறுவனம் வழங்கியது. பிற பரிசுகளும், அதன் அனுசரணையாளர்களின் விபரமும்:-
முதல் பரிசினை கீழக்கரையை சார்ந்த முஹம்மத் இல்யாஸ் பெற்றார். இரண்டாம் பரிசினை காயல்பட்டணத்தை சார்ந்த எஸ்.ஏ. முஹம்மது நூஹுவும், மூன்றாம் பரிசினை பாத்திமா பிசாஹ்வும் பெற்றார்கள்.
தகவல்:
காதர் ஷாமுனா,
Easy Exchange Limited,
ஹாங்காங். |