தூத்துக்குடி, கொழும்பு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து குறித்த திட்டறிக்கை அடுத்த சில வாரங்களில் மத்திய அமைச்சரவை முன் ஒப்புதலுக்காக தாக்கல் செய்யப்படும் என மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் சென்னையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார். இத்திட்டம் செயல்பட துவங்கினால் இரு நாடுகளுக்கு இடையே ஆன்மீக சுற்றுலா மேம்படும் என மேலும் அவர் கருத்து தெரிவித்தார்.
இரு நகரங்களுக்கு இடையே கப்பல் போக்குவரத்து 1990 ஆம் ஆண்டுக்கு பின் - இலங்கையில் இன பிரச்சனையால் - நிறுத்தப்பட்டது. அவ்வேளையில் கப்பல்களில் பயணம் செய்ய சிறுவருக்கு ரூபாய் 168-ம், பெரியோருக்கு ரூபாய் 240-ம் வசூலுக்கிப்பட்டது.
இச்சேவை மீண்டும் துவக்கப்பட்டால் அதற்கான கட்டணம் சுமார் ரூபாய் 1200 என நிர்ணயிக்கப்படலாம் என தெரிகிறது.
1. GREETINGS posted byKLM.ABOOBUCKER (KAYAL[ATNAM)[28 November 2010] IP: 175.*.*.* India | Comment Reference Number: 1295
ASSALAMU ALAIKUM. THIS MESSAGE IS AN ESSENTIAL NEWS WHICH WILL BOOST BOTH COUNTRIES TRADE ACTIVITIES CONSEQUENTLY GOOD RELATIONSHIP.MOU(memerandom of understanding)should be made in such a way this should be everlong and beneficial to both.in future,all poeople should get good things towards good and worth future.the ship journey should be an economical so that every people can utilise the same.....MAY ALLAH KEEP THIS OPPORTUNITY IN A BENEFICIAL AND SAFETY ONLE....INSHA ALLAH.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross