காயல்பட்டணத்தில் புற்று நோயை எதிர்கொள்வது எப்படி? |
பாகம் - 1 <> 2 <> 3 <>
4 <> 5 <> 6 <> 7
|
புற்று நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக கத்தார், ஹாங்காங் போன்ற இடங்களில் உள்ள காயல் நல மன்றங்களின்
ஏற்பாட்டில் காயல்பட்டணத்தில் நடந்துள்ளன. அந்நிகழ்ச்சிகள் மூலம் நூற்றுக்கணக்கான மக்கள் பயன் அடைந்துள்ளனர். மேலும் இம்முகாம்கள்
மூலம் பலர் புற்று நோயின் ஆரம்ப நிலையில் உள்ளதும் அறியப்பட்டு அவர்களும் முறையே தெரிவிக்கப்பட்டுள்ளனர்.
புற்று நோய் குறித்து மருத்துவர்கள் தாரக மந்திரமாய் கூறுவது ஒரு விஷயத்தை தான். எவ்வளவு சீக்கிரம் புற்று நோய் கண்டுபிடிக்கப் படுகிறதோ,
அவ்வளவு எளிது அதற்கான சிகிச்சை. இந்த முக்கிய கருத்தை மனதில் வைத்துக்கொண்டு - ஒருவர் புற்று நோயின் ஆரம்ப அறிகுறிகளை தானே
எவ்வாறு அறிந்துகொள்வது என்ற தகவலை திறம்பட, எளிதாக மனதில் பதியும் முறையில் - நகரில் உள்ள அனைவருக்கும் கொண்டு செல்ல
வேண்டும். இதற்கு பல வழிகள் உள்ளன :-
(1) வாரம் ஒருமுறை அல்லது இருவாரத்திற்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு ஒரு முறை என்ற வகையில் புற்று நோய் குறித்த - நகரில் உள்ள
மருத்தவர்கள் மேற்பார்வையில் - கருத்தரங்குகள், சொற்பொழிவுகள் ஏற்பாடு செய்யலாம். இந்நிகழ்வுகள் அனைவரையும் சென்றடையும் முறையில்
ஊரில் ஒவ்வொரு பகுதியிலும் ஏற்பாடு செய்யலாம். உள்ளூர் தொலைகாட்சிகளின் மூலம் இத்தகவல்களை அடிக்கடி ஒளிபரப்பு செய்யலாம்
(2) எளிதாக அனைவரும் புரிந்து கொள்ளும் முறையில் புற்று நோய் குறித்த தகவல்களை புத்தக வடிவிலோ அல்லது துண்டு பிரசார வெளியீடு
வடிவிலோ மக்களுக்கு எடுத்து செல்லலாம். எவ்வாறு ஒவ்வொரு வீட்டிலும் மார்க்க மற்றும் பிற நூல்கள் கண்டிப்பாக உள்ளனவோ, அது போல் புற்று
நோய் உட்பட உடல் ஆரோக்கியம் குறித்த தகவல் வெளியீடுகளையும் ஒவ்வொரு இல்லத்திற்கும் சென்றடைய செய்யலாம்
(3) பள்ளிக்கூட மாணவர்களுக்கு - அவர்களின் அன்றாட வகுப்புகளின் ஒரு வகுப்பாக எவ்வாறு மார்க்கக்கல்வி (MORAL INSTRUCTION) வழங்கப்படுகிறதோ அது போல் புற்று நோய் உள்ளடக்கிய உடல் நலன் குறித்த பாட வகுப்பு வாரம் ஒருமுறை ஏற்பாடு செய்யலாம்
சுருங்க சொல்வதென்றால் எவ்வாறு ஒருவரை நாம் ஆங்கிலத்தில் புலமை வாய்ந்தவர், கணிதத்தில் புலமை வாய்ந்தவர் என குறிப்பிடுகிறோமோ - அது போல் நகரில் அனைவரையும் புற்று நோய் உட்பட உடல் ஆரோக்கிய விசயத்தில் புலமை வாய்ந்தவராக மாற்ற - என்னென்ன வழிகள் உள்ளனவோ அவைகள் அனைத்தையும் நாம் கையாலலாம்.
புற்று நோய் குறித்த அறிவு, தகவல் ஏன் ஒவ்வொருவரும் பெற்றிருக்க வேண்டும் என்பதை - நாம் மேலே குறிப்பிட்டுள்ளது போல் - புற்று நோய் என்பது துவக்கத்திலேயே அறியப்பட்டால் குணப்படுத்துவது எளிது என்ற அடிப்படையிலும், அறிகுறிகள் என்னென்ன உள்ளது என்பதை அவரவரே அறிந்திருந்தால் தான், புற்று நோயால் உடலில் ஏற்படும் மாற்றங்களை புரிந்து, உரித்த நேரத்தில் அவரால் மருத்தவரிடம் சொல்ல முடியும் - என்ற அடிப்படையிலும் பார்த்தால் உணரலாம்.
இந்த தகவல் மற்றும் விழிப்புணர்வு சேவையை பாகம் 1 இல் குறிப்பிடப்பட்டுள்ள CANCER INFORMATION CENTRE மூலமாகவோ, பாகம் 3 இல் பரிந்துரைக்கப்பட உள்ள DIET CLINIC களை உள்ளடக்கி புதிய HEALTH INFORMATION CENTRE கள் மூலமாகவோ செயல்படுத்தலாம்.
[தொடரும்]
காயல்பட்டணத்தில் புற்று நோயை எதிர்கொள்வது எப்படி? |
பாகம் - 1 <> 2 <> 3 <>
4 <> 5 <> 6 <> 7
|
|