காயல்பட்டணத்தில் புற்று நோயை எதிர்கொள்வது எப்படி? |
பாகம் - 1 <> 2 <> 3 <>
4 <> 5 <> 6 <> 7
|
காயல்பட்டணத்தில் சமீப காலமாக புற்று நோய் அதிகரித்து வருகிறது என்பது பரவலான ஒரு கருத்தாகும். புற்று நோயினால் பாதிக்கப்பட்டவரை
அல்லது இறுதியாக உயிர் இழந்தவரை அனேகமாக தன் குடும்பத்திலேயோ அல்லது தன் நெருங்கிய வட்டத்திலேயோ அறிந்திராதவர்
காயல்பட்டணத்தில் இருக்கு முடியாது என்று கூறினால் அது மிகையாகாது.
இருப்பினும் - புற்று நோய் நகரில் எந்த அளவு பாதிப்பினை உண்டு பண்ணியுள்ளது என்பதனை துல்லியமான புள்ளி விபரங்களுடன் அறிவதற்கான
(முறையான, அறிவியல்பூர்வமான) வழி காயல்பட்டணத்தில் தற்போது இல்லை என்பதே உண்மை. உலகளவிலும், இந்தியாவின் பல நகரங்களிலும் (சென்னை உட்பட) CANCER REGISTRY என்ற புற்றுநோய் குறித்த ஆழமான விபரங்கள் சேகரிப்பு முறை நடைமுறையில் உள்ளது.
இந்த சேகரிப்பு முறை மூலம் ஒரு தேர்வு செய்யப்பட்ட ஜனத்தொகை பகுதியில் (GEOGRAPHICAL AREA) - எவ்வயதினற்கு, எவ்வகையான புற்று
நோய், எந்த பழக்க வழக்கங்களால் உண்டாகிறது என்ற அடிப்படை தகவல் பெறமுடிகிறது. இதற்கான மென்பொருள்களும் (SOFTWARES) இலவசமாக கிடைக்கின்றன. உதாரணமாக Canreg என்பது பிரான்ஸ் நாட்டில் இருந்து செயல்படும் INTERNATIONAL ASSOCIATION OF CANCER REGISTRIES (IACR) உடைய இலவச மென்பொருளாகும். இதன்மூலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவர் குறித்த அனைத்து முக்கியமான தகவல்களையும் பதிவு செய்யமுடியும்.
புற்று நோயினை காயல்பட்டணம் எதிர்கொண்டு, சமாளிக்க/வெற்றிபெற - முழுமையான, அறிவியல்பூர்வமான தகவல்கள் அவசியம் என்பதை அனைவருக்கும் விளக்கி, அதன்மூலம்தான் வருங்கால சமுதாயம் புற்று நோய்களின் பிடியிலிருந்து காப்பாற்றப்பட முடியும் என்பதையும் உணர்த்த வேண்டும். அம்முயற்சி எடுத்தால்தான் நகரில் புற்று நோய் குறித்த - நம்ப தகுந்த - தகவல் சேகரிக்கமுடியும். காயல்பட்டணத்தில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர் குறித்த சில தகவல் சேகரிப்பு முயற்சிகள் கடந்த காலங்களில் எடுக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களின் சில ஐயங்களால், அம்முயற்சிகள் யாவும் முழுமை அடையவில்லை.
இத்தகவல் சேகரிக்கும் பணியினை (CANCER REGISTRAR) - தனி,பிரத்தியேக அமைப்பு மூலம் (உதாரணமாக CANCER INFORMATION CENTRE) அல்லது நகரில் உள்ள மருத்துவமனைகளில் ஒன்றன் கட்டுப்பாட்டின் கீழ் - செயல்படுத்தலாம்.
புற்று நோயை எதிர்கொள்வதில் இதுவே நகரின் முதல் மற்றும் முக்கிய செயலாக இருக்கவேண்டும்.
[தொடரும்]
காயல்பட்டணத்தில் புற்று நோயை எதிர்கொள்வது எப்படி? |
பாகம் - 1 <> 2 <> 3 <>
4 <> 5 <> 6 <> 7
|
|