ஒரு மொபைல் சேவை நிறுவனத்திலிருந்து மற்றொரு மொபைல் சேவை நிறுவனத்திற்கு மாறும் போது சந்தாதாரர் தங்கள் மொபைல் எண்ணை தக்கவைத்துக்கொள்ளும் வசதி (MOBILE NUMBER PORTABILITY) நேற்று ஹரியானா மாநிலம் ரோஹ்டக் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டது. அவ்வாறு மாற்றப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து முதல் அழைப்பினை மத்திய தொலைதூரதொடர்பு அமைச்சர் கபில் சிபல் - ஹரியானா முதல்வர் புபிந்தர் சிங் ஹூதாவிர்க்கு செய்தார்.
அத்தருணத்தில் பேசிய மத்திய அமைச்சர் எண்ணை தக்கவைத்துக்கொள்ளும் வசதி நிறுவனங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியை உண்டாக்கும் எனவும், ஆகவே சந்தாதாரர் அனைவர்க்கும் குறைந்த விலையில், சிறந்த சேவை கிடைக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
ஹரியானாவில் துவக்கப்பட்ட இவ்வசதி இந்திய முழுவதும் வரும் ஜனவரி 20 (2011) முதல் அறிமுகம் படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
2004 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மொபைல் சந்தாதாரர் எண்ணிக்கை இந்தியாவில் 3.3 கோடி என இருந்தது. தற்போது இந்தியாவில் 70 கோடி மொபைல் சந்தாதாரர் உள்ளனர்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross