காயல்பட்டினத்தில் உள்ள பொது நல சங்கங்கள் சார்பாக தொலைநோக்கு பார்வையில் காயல்பட்டினம் - செயல்திட்ட முன்வடிவு என்ற பெயரில் பரிந்துரை அறிக்கை ஒன்று காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை பரிசீலனைக்கு சமர்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த ஆலோசனை கூட்டம் நவம்பர் 24 அன்று காலை காயிதே மில்லத் சங்கத்தில் வைத்து நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ரெட் ஸ்டார் சங்க தலைவர் எம். சேகு அப்துல் காதர் தலைமை தாங்கினார். காயிதே மில்லத் சங்க பொருளாளர் கே.ஜே. ஷாகுல் ஹமீது கிராஅத் ஓத, எஸ்.கே. ஸாலிஹ் இப்பரிந்துரைகள் குறித்த விளங்கங்களை வழங்கினார்.
தொடர்ந்து கூட்டத்தில் கலந்த கொண்ட சங்கங்களின் பிரதிநிதிகளுக்கிடையே பரிந்துரைகள் குறித்த கருத்து பரிமாற்றம் நடைபெற்றது. சங்கங்களின் பிரதிநிதிகள் பரிந்துரைகள் அறிக்கையினை ஐக்கிய பேரவையிடம் சமர்பிக்க ஏகமனதாக ஒப்புதல் அளித்தனர்.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் விபரம் வருமாறு :-
(1) கே.எம்.என். மஹ்மூத் லெப்பை (காயிதே மில்லத் இளைஞர் சமூக அமைப்பு)
(2) கே.ஜே.ஷாகுல் ஹமீது (காயிதே மில்லத் இளைஞர் சமூக அமைப்பு)
(3) குளம் ஜமால் முஹம்மது (அல் அமீன் இளைஞர் மன்றம்)
(4) எம்.எஸ்.அப்துர் ரவூப் (அல் அமீன் இளைஞர் மன்றம்)
(5) எம்.சேகு அப்துல் காதர் (ரெட் ஸ்டார் சங்கம்)
(6) எம்.ஏ.எஸ்.ஜரூக் (ரெட் ஸ்டார் சங்கம்)
(7) ஆர்.ஷேக் அலி (ரெட் ஸ்டார் சங்கம்)
(8) எஸ்.ஹெட்ச்.மக்தூம் (இளைஞர் ஐக்கிய முன்னணி)
(9) எஸ்.ஏ.கே.முஹைதீன் அப்துல் காதர் (இளைஞர் ஐக்கிய முன்னணி)
(10) எஸ்.ஹெச்.அஹ்மத் முஸ்தபா (இளைஞர் ஐக்கிய முன்னணி)
(11) என்.எம். அஹ்மத் (மஜ்லீஷுல் கெளத்)
(12) நியாஸ் (மஜ்லீஷுல் கெளத்)
(13) ஹாபில் நயீம் (மஹ்லருல் ஆப்தீன் சன்மார்க்க சபை)
(14) எஸ்.கே.ஸாலிஹ்
(15) எம்.எஸ்.முஹம்மது சாலிஹு
கையெழுத்திட்டுள்ள சங்கங்கள் விபரம் வருமாறு :-
(1) காயிதே மில்லத் இளைஞர் சமூக அமைப்பு
(2) அல் அமீன் இளைஞர் மன்றம்
(3) ரெட் ஸ்டார் சங்கம்
(4) இளைஞர் ஐக்கிய முன்னணி
(5) மஜ்லீஷுல் கெளத்
(6) ஐக்கிய விளையாட்டு சங்கம்
(7) மஹ்லருல் ஆப்தீன் சன்மார்க்க சபை
இறுதியில் மஜ்லிஷில் கெளத் சங்க நிர்வாகி நியாஸ் நன்றியுரை கூற, எஸ்.கே.ஸாலிஹ் துவாவுக்கு பின், சலவாத்துடன் கூட்டம் நிறைவுற்றது.
தகவல்:
கே.ஜே. ஷாகுல் ஹமீது,
பொருளாளர், காயிதே மில்லத் இளைஞர் சமூக அமைப்பு.
|