கத்தார் வாழ் காயலர்கள் ஹஜ் பெருநாள் முன்னிட்டு மூன்று தின ஒன்று கூடல் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். நவம்பர் 17 அன்று அல் சமால் பூங்காவிலும், நவம்பர் 18 மற்றும் 19 அன்று அல் கரியா கடற்கரை இல்லத்திலும் ஒன்று கூடல் நடந்தது. குடும்பங்களுடனும், தனியாகவும் இதில் பலர் கலந்துகொண்டனர். இது குறித்து கத்தார் நல மன்ற தலைவர் பஷுல் கரீம் தெரிவித்துள்ளதாவது :-
நவம்பர் 17 அன்று ...
நவம்பர் 17 அன்று ஒன்று கூடல் அல் சமால் பூங்காவில் நடந்தது. இதில் சிறுவர்கள் மற்றும் பெரியோர்களுக்கான ஓட்டப்பந்தய போட்டி, பெரியோர்களுக்கான கிரிக்கெட் மற்றும் சட்டெல் கார்க் போட்டிகள், பெண்களுக்கான பந்தினை கைமாற்றுதல் போட்டி ஆகியவை நடந்தன. உணவு தயாரிப்பில் பெயர் பெற்ற பெருநாள் தம்பி என்ற முகைதீன் அவர்கள் மேற்பார்வையில் காயலரின் பாரம்பரிய உணவான நெய் சோறு, கலரிகறி மற்றும் கத்தரிக்கா ஆகியவை பரிமாறப்பட்டன.
நவம்பர் 18 அன்று ...
நவம்பர் 18 அன்று மதியம் 3:30 மணிக்கு காயலர் 40 பேர் (குடும்பங்கள் மற்றும் தனியாக) அல் கரியா கடற்கரை இல்லம் நோக்கி புறப்பட்டனர். அவர்களுடன் சிறப்பு விருந்தினராக பாலா குடும்பத்தினர் கலந்துகொண்டனர். சுமார் 2:30 மணி நேர பயணத்திற்கு பிறகு கடற்கரை இல்லத்தை மாலை 6:00 மணிக்கு அடைந்தனர்.
கடற்கரை இல்லத்தில் முதலில் Barbecue விற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் சிறுவர் மற்றும் பெரியோர்களுக்கான விளையாட்டு போட்டிகள் துவங்கின. ஸ்பூன் விளையாட்டு, டம்ப் சராத் மற்றும் வினாடி வினா போட்டிகள் இரவு 10:00 மணிக்கு துவங்கி அதிகாலை 3:00 மணி வரை நடைபெற்றன. பஜர் தொழுகைக்கு பின்னர் அநேகமானோர் உறங்க சென்றனர். ஒரு சிலர் சூரிய உதய காட்சியினை கண்டப்பின்னர் உறங்க சென்றனர்.
நவம்பர் 19 அன்று ...
நவம்பர் 19 காலைப்பொழுதை சிறுவரும், பெரியோரும் மீன்பிடித்தும், கடலில் நீராடியும் கழித்தனர். ஜும்மா தொழுகைக்குப்பின்னர் காய்கறி உணவும், மீன் பொரியலும் கலந்த மதிய விருந்து மதியம் 2:30 மணிக்கு நடந்தது. போட்டிகளில் வெற்றிபெற்றோர்கான பரிசளிப்பு நிகழ்ச்சி மாலை 4:00 க்கு துவங்கியது. இறுதியாக மாலை 5:00 மணிக்கு சுண்டல் மற்றும் தேநீர் சுவைத்தப்பின் அனைவரும் தங்கள் இல்லங்களுக்கு திரும்பினர்.
தகவல்:
பஷுல் கரீம்,
தலைவர், காயல் நல மன்றம், கத்தார். |