இந்திய ரயில்வேயின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப மெயில் மற்றும் துரித (Express) ரயில்களின் வேகம் படிப்படியாக
கூட்டப்படும் என மத்திய ரயில்வே துறை துணை அமைச்சர் இ.அஹ்மத் இன்று ராஜ்ய சபாவில் எழுத்துப்பூர்வ பதில் ஒன்றில் தெரிவித்துள்ளார். சரக்கு ரயில்களுக்கு என்று தனி பாதை அமைக்கும் பணி நடந்து வருவதாகவும், அப்பணிகள் நிறைவுற்றதும் ரயில்களின் சராசரி வேகம் மேலும் கூடும் என அமைச்சர் தெரிவித்தார்.
ரயில்களின் வேகம் குறித்து அமைச்சர் வழங்கிய புள்ளிவிபரம் வருமாறு :-
2005-2006 ஆம் ஆண்டு மீட்டர் அளவு ரயில் பாதை (MG) - 36.2 கீ.மீ (மணிக்கு சராசரி வேகம்) அகல ரயில் பாதை (BG) - 47.9 கீ.மீ (மணிக்கு சராசரி வேகம்)
2006-2007 ஆம் ஆண்டு மீட்டர் அளவு ரயில் பாதை (MG) - 35.2 கீ.மீ (மணிக்கு சராசரி வேகம்) அகல ரயில் பாதை (BG) - 48.2 கீ.மீ (மணிக்கு சராசரி வேகம்)
2007-2008 ஆம் ஆண்டு மீட்டர் அளவு ரயில் பாதை (MG) - 35.7 கீ.மீ (மணிக்கு சராசரி வேகம்) அகல ரயில் பாதை (BG) - 49.1கீ.மீ (மணிக்கு சராசரி வேகம்)
2008-2009 ஆம் ஆண்டு மீட்டர் அளவு ரயில் பாதை (MG) - 36.0 கீ.மீ (மணிக்கு சராசரி வேகம்) அகல ரயில் பாதை (BG) - 49.9 கீ.மீ (மணிக்கு சராசரி வேகம்)
2009-2010 ஆம் ஆண்டு மீட்டர் அளவு ரயில் பாதை (MG) - 35.8 கீ.மீ (மணிக்கு சராசரி வேகம்) அகல ரயில் பாதை (BG) - 50.0 கீ.மீ (மணிக்கு சராசரி வேகம்)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross