தான் புகைக்காமல் (அருகிலுள்ளவர்) புகைத்தல் (Passive Smoking) காரணமாக வருடத்திற்கு 6 லட்சம் பேர் மரணிப்பதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) - 192 நாடுகளில் மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. மரணிப்பவர்களில் சுமார் 2 லட்சம் பேர் குழந்தைகள் எனவும், பெண்கள் 281,000 பேர் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
உலகளவில் 40 சதவீத குழந்தைகளும், 33 சதவீதம் புகைபிடிக்காத ஆண்களும், 35 சதவீதம் புகைபிடிக்காத பெண்களும், PASSIVE SMOKING கிற்கு 2004 ஆம் ஆண்டு உட்படுத்தப்பட்டார்கள் என மேலும் அந்த ஆய்வு கூறுகிறது. அதன் காரணமாக இருதய நோய்க்காக 379,000 பேரும், மூச்சு சம்பந்த நோயினால் 165,000 பேரும், ஆஸ்த்மாவினால் 36,900 பேரும், நுரையீரல் புற்றுநோயினால் 21,400 பேரும் மரணித்ததாக ஆய்வு தெரிவிக்கிறது.
PASSIVE SMOKING பிரச்சனை ஐரோப்பா மற்றும் ஆசியாவில் அதிகம் என்றும், அமெரிக்க கண்டங்கள், கிழக்கு மெடிட்டெர்ரேநியன் மற்றும் ஆப்ரிக்காவில் குறைவு என்றும் அதே ஆய்வு தெரிவிக்கின்றது.
உலகில் 120 கோடி புகைப்பவர்கள் உள்ளதாகவும், அவர்களினால் மேலும் பல கோடி மக்கள் புகைத்தலின் விளைவுக்கு பலியாகிறார்கள் என்றும் இந்த ஆய்வு குறித்து கருத்து கூறிய வல்லுநர் ஒருவர் LANCET மருத்தவ இதழில் தெரிவித்துள்ளார்.
|