நகரில் பெருகிவரும் புற்றுநோய் நீங்க, காயல்பட்டினம் சொளுக்கார் தெரு, நஹ்வி அப்பா திடலில், 17.11.2010 புதன்கிழமை இரவு 08.00 மணிக்கு பிரார்த்தனை நிகழ்ச்சி, நஹ்வி அப்பா நற்பணி மன்றத்தின் சார்பில் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சி குறித்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
நகரில் பெருகிவரும் புற்றுநோய் நீங்க, காயல்பட்டினம் சொளுக்கார் தெரு, நஹ்வி அப்பா திடலில், 17.11.2010 புதன்கிழமை இரவு 08.00 மணிக்கு பிரார்த்தனை நிகழ்ச்சி, நஹ்வீ எஸ்.ஏ.ஷெய்க் அப்துல் காதிர் தலைமையில் நடைபெற்றது.
காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளியின் துணைத்தலைவர் இ.எஸ்.புகாரீ ஆலிம், ஹாஜி எஸ்.எம்.யூஸுஃப் ஸாஹிப், ஹாஜி என்.எஸ்.நூஹ் ஹமீத், ஹாஜி எஸ்.இ.முஹம்மத் அப்துல் காதிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துவக்கமாக, ஸஹீஹுல் புகாரீஷ் ஷரீஃப் கிரந்தத்திலிருந்து சில நபிமொழிகள் ஓதப்பட்டது. இந்நிகழ்வை குருவித்துறைப் பள்ளியின் முன்னாள் இமாம் டி.எம்.கே.சுல்தான் அப்துல் காதிர் வழி நடத்தினார். அதனைத் தொடர்ந்து பத்ர் ஸஹாபாக்கள் திருநாமம் ஓதப்பட்டது. ஹாஃபிழ் நஹ்வீ எம்.எம்.முஹம்மத் இஸ்மாயீல் இந்நிகழ்வை வழிநடத்தினார்.
அதனைத் தொடர்ந்து ராத்திபத்துல் ஜலாலிய்யாஹ் மஜ்லிஸ், குருவித்துறைப் பள்ளியின் இமாம் ஹாஜி எம்.எல்.முஹம்மத் அலீ ஆலிம் தலைமையில் நடைபெற்றது. ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ துஆவுடன் முதல் அமர்வு நிறைவுற்றது.
பின்னர், நகரில் பெருகி வரும் புற்றுநோய் நீங்குவதற்காக சிறப்பு பிரார்த்தனை மஜ்லிஸ் நடைபெற்றது. ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ தமிழ் மொழியாக்கத்துடன் விசேஷ துஆ பிரார்த்தனை செய்தார்.
ஸலாம் பைத்துடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன. இந்நிகழ்ச்சிகளில், நகரின் முக்கிய பிரமுகர்கள், மார்க்க அறிஞர்கள், ஹாஃபிழ்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
நஹ்வீ M.M.முத்துவாப்பா,
சொளுக்கார் தெரு, காயல்பட்டினம். |