இந்திய ரயில்வே புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்க்கு என கட்டணங்களில் (BASIC FARE) முழு சலுகை (100%) வழங்குகிறது. மேலும் அவருடன் பயணம் செய்பவர்க்கு அனைத்து வகுப்பு கட்டணத்திலும் 75 சதீவத சலுகையும், முதல் மற்றும் இரண்டாம் ஏ.சி. வகுப்புகளில் 50 சதவீத சலுகையும் வழங்குகிறது. இச்சலுகையை பயன்படுத்த விரும்புபவர் அதற்கான சான்றிதல் கொண்டு முன்பதிவு செய்யவேண்டும். சான்றிதல் மாதிரி காண இங்கு அழுத்தவும்.
இந்தியா முழுவதும் 245 ரயில்களில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்க்கு என இடங்கள் (QUOTA) ஒதுக்கப்பட்டுள்ளது. அவைகள் நிரம்பும் பட்சத்தில் Emergency Quota (EQ) ஒதுக்கீட்டில் இருந்தும் இடம் பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
சில ரயில்களில் அனைத்து EQ ஒதுக்கீடும் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களால் பதிவு செய்யப்பட்டு விடுவதால் இந்திய ரயில்வே தற்போது புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி EQ ஒதுக்கீட்டில் இருந்து இனி Sleeper வசதி பெட்டிகளில் இருந்து 4 இடங்கள் வரையும், பிற வகுப்புகளில் இருந்து 2 இடங்கள் வரையும் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முன் பதிவுக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இத்தகவலை இன்று மத்திய ரயில்வே துறை துணை அமைச்சர் இ.அஹ்மத் ராஜ்ய சபாவில் எழுத்துப்பூர்வ பதில் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
1. வரவேற்பும் - வேதனையும் posted byN.S.E. மஹ்மூது (Yanbu - Saudi Arabia)[26 November 2010] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1262
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
நமது அரசாங்கம் இந்த சலுகையை தந்திருப்பது வரவேற்கத் தக்கதுதான், மகிழ்ச்சிதான் என்றாலும் வேதனையாகவும் இருக்கிறது.
எந்த அளவுக்கு "இவ்வளவு மக்கள் புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்" என்று எண்ணும்போது.
அரசாங்கம் சலுகை தந்திருப்பதை நல்ல முறையிலே, முறையாக பயன்படுத்தி தேவையான மருத்துவத்தை காலம் தாழ்த்தாமல் செய்ய வேண்டியது பாதிக்கப்பட்டிருப்பவர்களின்
கடமையாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹ், அவன் கருணையால் யாருக்கும் இந்த மாதிரி நோய்கள் வராமல் காத்தருள்வானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross