காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் ஏற்பாட்டில் ஹஜ் பெருநாள் ஒன்று கூடல் நிகழ்ச்சி நவம்பர் 17 அன்று நடைபெற்றது. அன்று மாலை 6:30 மணி முதல் ஹாங்காங் வாழ் காயலர்கள் - சிறுவர், பெரியோர், குழந்தைகள், பெண்கள் - என அனைவரும் மஹ்ரிப் தொழுகைக்குப்பின் மிடில் ரோட்டில் உள்ள சிந்தி பார்க் என்று அழைக்கப்படும் குழந்தைகள் பூங்காவில் கூட துவங்கினர்.
மாணவி ஜுழைஹா ஜப்ரீன் உடைய கிராஅத் மாலை நிகழ்சிகளை துவக்கிவைத்தது. பேரவையின் துணைத் தலைவர் பொறியாளர் எம். செய்யத் அஹ்மத் வரவேற்புரை நிகழ்த்தினார். ஆலோசனை குழு உறுப்பினர் ஹாஜி ஏ.எஸ்.ஜமால் அவர்களின் ருசிகரமான உரையை தொடர்ந்து சிறப்பு விருந்தினர் ஹாஜி எம்.கே.ஹமீது சுல்தான் உரையாற்றினர்.
ஹமீது சுல்தான் அவர்கள் ஹாங்காங்கில் குடியேறிய முதல் தலைமுறையை
சார்ந்த மர்ஹூம் ஹாஜி காசீம் அவர்களின் மகன் ஆவார். தொழில் நிமிர்த்தமாக மும்பையில் வாழும் ஹமீது சுல்தான் சீனா - ஹாங்காங் வந்திருந்த போது பேரவை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அதனை தொடர்ந்து சிறுவர்களுக்கான நிகழ்ச்சிகள் நடந்தது. காயல்பட்டண ருசியில் கஞ்சியும், சமோசாவும் அனைவருக்கும் பரிமாறப்பட்டது. பொறியாளர் எம். செய்யத் அஹ்மத் நன்றி உரை வழங்கினார். ஹாஜி எம்.என்.முஹைதீன் அவர்களின் துஆவுடன் இரவு 9 மணிவாக்கில் நிகழ்சிகள் நிறைவுற்றன. ஏறத்தாழ 175 காயலர்கள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியினை வெற்றிகரமாக நடத்திட உழைத்த செயற்குழு உறுப்பினர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
தகவல்:
எஸ்.அப்துல் அஜீஸ்,
தலைவர், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங். |