காயல்பட்டணத்தில் நேற்று (நவம்பர் 20) மாலை 6:00 மணி அளவில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் அரசியல் பிரிவான மனித நேய மக்கள் கட்சி சார்பாக விழிப்புணர்வு பொதுக்கூட்டம் வள்ளல் சீதக்காதி திடலில் வைத்து நடைப்பெற்றது.

இக்கூட்டத்திற்கு நகர தமுமுக தலைவர் எம்.கே.ஜாகிர் ஹுசைன் தலைமை தாங்கினார். ஏ.எஸ்.பிர்தௌஸ் (தமுமுக நகர செயலாளர்), ஆசாத் (தமுமுக மாவட்ட தலைவர்), என்.எம்.தமீமுல் அன்சாரி (தமுமுக நகர துணை தலைவர்), ஹெச்.பீரப்பா (மமக மாவட்ட செயலாளர்), எஸ்.எம்.பீ.முஹம்மது நைனா (தமுமுக மாவட்ட பொருளாளர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமுமுக நகர துணை செயலாளர் வாவு புஹாரி வரவேற்புரை ஆற்றினார்.
தமுமுக மாநில துணை செயலாளர் கோவை செய்யத் சிறப்புரை ஆற்றினார். நகர மமக செயலாளர் எஸ்.ஏ.கே.செய்யத் ஐத்ரூஸ் நன்றி உரை வழங்கினார்.
தமுமுக நகர பொருளாளர் சிம்சன் உமர், மமக நகர துணை செயலாளர் ஏ.ஆர்.முஸ்தபா, தமுமுக வர்த்தக அணி செயலாளர் எம்.முஹம்மது ரபீக் உட்பட பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தின் நிறைவில் கீழ்க்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-
(1) செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை சென்னைக்கு தினசரி கார்ட் லைனில் இயக்க இந்த பொதுக்கூட்டம் கேட்டு கொள்கிறது
(2) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட இரண்டாம் பைப் லைன் திட்டத்தை கிடப்பில் போடாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்
(3) இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நம் நகராட்சிக்கு போதிய துப்பரவு பணியாளர்கள் இல்லாததால் ஆங்காங்கே குப்பை குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார கேடு ஏற்படுகிறது
(4) புதிய பேரூந்து நிலையம் அருகில் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் மற்றும் மின்சார வாரிய அலுவலகம் கட்ட இடங்கள் கையாப்படுத்தபட்ட பின்பும் வாடகை கட்டிடங்களில் இயங்கி வருகிறது வேதனைக்குரியது. உடனடியாக நிறைவேற்ற பட வேண்டும்.
புகைப்படங்கள்:
வீனஸ் ஸ்டுடியோஸ்,
எல்.கே.லெப்பை தம்பி சாலை,
காயல்பட்டணம். |