காயல்பட்டணத்தில் விளையாட்டிற்கு என உருவாக்கப்பட்ட முதல் சங்கம் ரெட் ஸ்டார் சங்கம் ஆகும். 1939 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இச்சங்கத்தில் பிரதானமாக தமிழகத்தில் உருவான விளையாட்டான பூப்பந்து (BALL BADMINTON) விளையாடப்பட்டு வருகிறது. 70 ஆண்டுகள் கடந்துள்ள இச்சங்கத்தினை புதுப்பிக்க இப்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. இம்முடிவினை இன்று காலை கூடிய சங்கத்தின் பொதுக்குழு எடுத்தது.
காலை 10:30 மணிக்கு துவங்கிய பொதுக்குழு கூட்டத்திற்கு சங்கத்தின் துணைத்தலைவர் எம்.ஏ.எஸ். ஜரூக் அவர்கள் தலைமை தாங்கினார்கள். சங்கத்தின் செயலாளர் ஒ.ஏ.நசீர் அஹ்மத், துணை செயலாளர் எம். அப்துல் ரவூப், பொருளாளர் ஆர். ஷேய்க் அலி ஆகியோர் உட்பட சங்க உறுப்பினர் பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். சங்கத்தினை புதுப்பிக்கும் விசயமாக குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.
புகைப்படங்கள்: எம்.எப். முஹம்மது சாலிஹு மற்றும் எஸ்.எம். சாமு சிஹாபுதீன்
தகவல்: ஒ.ஏ.நசீர் அஹ்மத்,
செயலாளர், ரெட் ஸ்டார் சங்கம்.
1. Good Initiative posted byABDUL BASITH (DUBAI )[20 November 2010] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1156
Dear Brothers of Red star, this is the good initiative for the construction of red star, go ahaed with fresh mind and full effort, inshaallah we will be successfull. also please dont forget the plan of constructing marriage hall which is the most expectation of all of our jamath members.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross