காயல்பட்டணத்தில் புற்று நோயை எதிர்கொள்வது எப்படி? |
பாகம் - 1 <> 2 <> 3 <>
4 <> 5 <> 6 <> 7
|
பாகம் 2-இல் புற்று நோயின் அறிகுறிகளை துவக்கத்திலேயே அறிந்துகொள்வதன் முக்கியதுவத்தையும்,
அதற்கான சில வழிமுறைகளையும் பார்த்தோம். இப்போது புற்று நோய் வாராமல் இருக்க நமது உணவு முறைகளில் செய்யவேண்டிய மாற்றங்களை
பார்க்கலாம்.
புற்று நோய் தோன்றுவதற்கு முக்கிய காரணங்களில் நமது உணவு பழக்கங்களையும் மருத்துவர்கள் முக்கியமானது என்று தெரிவிக்கின்றனர்.
உதாரணமாக உப்புக்கொண்டு மீன்கள் மற்றும் மாமிசத்தை பதம்படுத்தும் சமூகங்களில் வயிற்று புற்று நோய் அதிகம் உள்ளதாக புள்ளிவிபரங்கள்
தெரிவிக்கின்றன. அதுபோல காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் உட்கொள்ளும் சமூகங்களில் சில புற்று நோய்கள் குறைவாக இருப்பதாக
புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
புற்று நோய்கள் மற்றும் அன்றி நமது உணவு பழக்கங்களால் பிற நோய்களும் (இருதய, நீரிழுவு, கிட்னி நோய்கள்) பெருகி உள்ளன என்பதனை
கருத்தில் கொண்டு நகரில் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை அறிவுறுத்தும் விதமாக தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இம்முயற்சி
புற்று நோய்க்கு மட்டும் எதிராக இல்லாமல் பிற உயிர்கொல்லி நோய்களில் இருந்தும் நமக்கு பாதுகாப்பு தரும்.
நகரில் தெருவுக்கு ஒன்று என்றோ, ஜமாஅத்துக்கு ஒன்று என்றோ, பகுதிக்கு ஒன்று என்றோ - DIET CLINIC கள் துவக்கலாம். இவைகளை நடத்த
மருத்தவர்கள் தேவை இல்லை. Nutrition, Dietetics போன்ற பட்ட படிப்புகளை படித்துள்ளவர்களே போதும். நகரில் இந்த பட்டப்படிப்புகளை
படித்த பலர் உள்ளனர். மருத்துவர் அல்லது மருத்துவமனைகளின் மேற்பார்வையில் இந்த கிளினிக்கள் இயங்கலாம்.
இது போன்ற கிளினிக்கள் மூலம் ஒவ்வொருவருக்கும் அவர் உடல் எடை பற்றி, அவரின் அன்றாட உணவு முறைகள் பற்றி, சிறந்த உணவு,
தவிர்க்கவேண்டிய உணவு போன்ற தகவல்களை - தனி நபர் அடிப்படையில் - இந்த கிளினிக்கள் மூலம், செவ்வனே வழங்கலாம். இதன் மூலம் புற்று
நோய் மட்டும் அல்லாமல், பிற நோய்களில் இருந்தும் பாதுகாப்பு பெற வழி வரும்.
இந்த டைட் கிளினிக்கள் தனியாகவோ, அல்லது பாகம் 2-இல் பரிந்துரைக்கப்பட்ட CANCER INFORMATION
CENTRE - வுடன் இணைக்கப்பட்டு, விரிந்த HEALTH INFORMATION CENTRE-களாகவோ செயல்படலாம்.
[தொடரும்]
காயல்பட்டணத்தில் புற்று நோயை எதிர்கொள்வது எப்படி? |
பாகம் - 1 <> 2 <> 3 <>
4 <> 5 <> 6 <> 7
|
|