நகரில் பெருகிவரும் புற்று நோய் சம்பந்தமாக நேற்று (நவம்பர் 28) ஞாயிறு மாலை - 5 மணி அளவில் கே.எம்.டி. மருத்துவமனையில் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில்
மருத்துவர்களும், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவை
செய்திருந்தது.
கூட்டத்திற்கு ஹாஜி எஸ்.எம். மிஸ்கீன் சாஹிப் பாஸி தலைமை தாங்கினார். ஹாஜி எம்.எம்.உவைஸ், ஹாஜி வாவு செய்யிது அப்துர்
ரஹ்மான், ஹாஜி எஸ்.எம்.கபீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஹாஜி வாவு எஸ்.ஏ.ஆர். இஸ்ஹாக் கிராஅத் ஓதி நிகழ்வுகளை துவக்கி வைத்தார். ஹாஜி வாவு முஹம்மது நாசர் வரவேற்புரைக்குப்பின்,
எம்.எல். ஷாகுல் ஹமீது (SK) அறிமுகவுரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியல் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கிய மருத்துவர்கள் வருமாறு:-
(1) டாக்டர் எம்.எஸ்.எஸ். இஸ்மாயில்
(2) டாக்டர் எம்.ஏ.முஹம்மது தம்பி
(3) டாக்டர் அபுல் ஹசன்
(4) டாக்டர் வீ. பாவநாச குமார்
(5) டாக்டர் முஹம்மது மொஹிதீன்
(6) டாக்டர் முஹம்மது அபூபக்கர்
(7) டாக்டர் நூஹு பாரிஸ்
(8) டாக்டர் பாசி
அவ்வேளையில் மருத்தவர்கள் தெரிவித்த கருத்துக்களின் சாராம்சம் வருமாறு:-
== புற்று நோய்கள் பெருக மரபணுக்கள் (Genes), உணவு பழக்கங்கள், கிருமிகள், சுகாதார சீர்கேடுகள் போன்றவை காரணமாக இருக்கலாம். DCW,
மொபைல் டவர்கள் தான் காரணம் என்று ஆதாரங்கள் இல்லாமல் சொல்ல முடியாது
== முதல் கட்டமாக Cancer Registry மூலம் தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டும். உலகளவிலான புற்று நோய் மையங்கள் வகுத்துள்ள அடிப்படை
எண்ணிக்கைக்கு கூடுதலாக நகரில் புற்று நோய் உள்ளதா என்பதை அதன் அடிப்படையில் உறுதி படுத்த வேண்டும்
== காற்று, நிலம் மற்றும் நீரினை மாசு பரிசோதனை செய்யவேண்டும்
== அடிக்கடி எக்ஸ்ரே எடுப்பதன் மூலமும், சமையலுக்கு ஒரே எண்ணையை பலமுறை பயன்படுத்துவதன் மூலமும் புற்று நோய் வர வாய்ப்புகள்
கூடுகின்றன
மருத்துவர்களின் ஆலோசனை கூட்டத்திற்கு அடுத்து, நகர் நல அமைப்புகள், ஆர்வலர்கள் அழைக்கப்பட்டு விரிவான ஆலோசனை கூட்டம் விரைவில்
நடத்தப்படும் என்றும், அதனை தொடர்ந்து மேற்கொண்டு எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை தீர்மானிக்கலாம் என்றும் முடிவு
செய்யப்பட்டது.
நன்றியுரையினை ஹாஜி செய்யத் முஹம்மது அலி வழங்கினர். ஹாஜி எஸ்.டி. புஹாரியின் துஆவிற்கு பின்னர் கூட்டம் மாலை 6:30 மணிக்கு
நிறைவுற்றது.
ஹாஜி நூஹு, ஹாஜி பிரபு சுல்தான், ஹாஜி சதக்கத்துல்லாஹ், ஹாஜி டி.ஏ.எஸ்.அபூபக்கர், ஹாஜி வாவு அப்துல் கப்பார், ஹாஜி வட்டம்
ஹசன் மரைக்கார், ஹாஜி பிரபு தம்பி, ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக், முத்து ஹாஜி, ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மது, எல்.எம்.ஈ. கைலானி,
மஹ்மூத் நைனா, பி.எம்.டி.அப்துல் காதர், எஸ்.ஏ.கே. முஹைதீன் அப்துல் காதர், எஸ்.ஏ.கே.பாவா நவாஸ், மெஹர் அலி, பாதுல் அஹ்சாப்
ஆலிம், எல்.டி.அஹ்மத் முஹைதீன், வீ.எஸ். முஹைதீன் தம்பி மற்றும் பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தகவல்:
ஏ.தர்வேஷ் முஹம்மத் |