காயல்பட்டணத்தில் புற்று நோயை எதிர்கொள்வது எப்படி? |
பாகம் - 1 <> 2 <> 3 <>
4 <> 5 <> 6 <> 7
|
நகரில் புற்று நோய்க்கான குற்றவாளிகளில் மற்றொன்றாக (அலைப்பேசி கோபுரங்கள் தவிர்த்து) பெரும்பாலானோர் பார்ப்பது அருகில் உள்ள DCW
தொழிற்சாலையை தான்.
புற்று நோய் குறித்த அச்சத்திற்கு முன்னரே DCW குறித்த பயம் நகரில் பலருக்கு பல ஆண்டுகளாக உண்டு. பல பெற்றோர் - தங்கள் பிள்ளைகளை
மாசு அச்சத்தினாலேயே DCW நிர்வாகத்தால், தொழிற்சாலை வளாகத்தில் நடத்தப்படும் கமலாவதி பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதில்லை. அதனை பற்றி எந்த
அச்சமும் இல்லாமல் தங்கள் பிள்ளைகளை கமலாவதியில் சேர்த்த/சேர்க்கும் பெற்றோர்களும் பலர் உண்டு.
அவ்வப்போது DCW -இல் இருந்து வெளிவரும் புகை நகரை சூழ்ந்த அனுபவம், திடீரென நிறம் மாறும் கடல் போன்றவை - DCW குறித்த அச்சத்தை
மேலும் நகரில் வலுப்பெறச் செய்தது.
அந்த அச்சத்தில் நியாயம் உள்ளதா?
DCW - இல் பல ஆபத்தான இரசாயனங்கள், இரசாயன பொருட்கள் தயாரிக்கப்படுவது அனைவரும் அறிந்ததே. உதாரணமாக Chlorine, PVC,
TriChloroEthylene, Synthetic Rutile போன்ற இரசாயனங்கள் DCW - வின் பிரதான தயாரிப்புகள். இவைகளில் சில புற்று நோய் உண்டாக்க தகுதி வாய்ந்தவை.
இருப்பினும் அவைகளால் தான் நகரில் புற்று நோய் வருகிறது என நிரூபிக்க - நம் உடலில் அந்த பொருட்கள் எவ்வாறு நுழைந்தது என்ற ஆதாரம்
வேண்டும். காற்று மூலமோ, தண்ணீர் மூலமோ, உண்ணும் மீன் மூலமோ என ஆதாரத்தோடு நிரூபித்தால் தான் சட்டம் DCW குறித்த நம்
அச்சத்தை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளும்.
-- நகரின் ஆர்வலர்கள் DCW - சுற்றி மண், நீர், காற்று போன்ற சோதனைகளை மேற்கொள்ளலாம்
-- DCW - குறித்த மாசு பற்றிய தகவலை அதன் நிர்வாகத்திடமே கேட்கலாம். திருப்தியான பதில் இல்லாத பட்சத்தில் அரசினையும், மாசு கட்டுபாடு
வாரியத்தையும் அணுகலாம்
-- இறுதி கட்டமாக சட்டரீதியாக பொது நல வழக்கு (Public Interest Litigation - PIL) மூலம் DCW குறித்த தீவிர விசாரணை மேற்கொள்ள
கேட்கலாம்
இறுதியாக - புற்று நோய் பிரச்சனையை அணுகும் யாவரும் - ஒரு காரணத்தால் தான் நகரில் புற்று நோய் வருகிறது என்று நினைக்காமல், பல காரணங்கள் இதற்கு இருக்கலாம் என்ற பரந்த கண்ணோட்டத்தோடு அணுகுவது - இந்நோயிலிருந்து நிரந்தர தீர்வு நமக்கு கிடைக்க வழி வகுக்கும்.
[முற்றும்]
காயல்பட்டணத்தில் புற்று நோயை எதிர்கொள்வது எப்படி? |
பாகம் - 1 <> 2 <> 3 <>
4 <> 5 <> 6 <> 7
|
|