DCW தொழிற்சாலையின் வரலாறு 1925 - இல் துவங்குகிறது. அவ்வாண்டில் -
மேற்கு இந்தியாவில் திராங்கத்ரா (Dhrangadhra) என்ற
மாகாணத்தில் Soda Ash என்றும் Washing Soda என்றும் அழைக்கப்படும் Sodium Carbonate என்ற இரசாயன பொருளை தயாரிக்கும் தொழிற்சாலை
துவக்கப்பட்டது (திராங்கத்ரா இப்போது குஜராத் மாநிலத்தின் சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ளது).
14 ஆண்டுகள் கழித்து - 1939 ஆம் ஆண்டு - அந்த நிறுவனம் புது நிர்வாகத்தின் கீழ் வந்தது. Dhrangadhra Chemical Works (DCW) என்ற பெயரும்
அதற்கு கொடுக்கப்பட்டது. பின்னர் - 1986 ஆம் ஆண்டு முதல் - நிறுவனத்தின் பெயர் DCW Ltd என சுருக்கப்பட்டது.
DCW உடைய குஜராத் பிரிவில் Soda Ash பொருட்கள் சுமார் 85 ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டு வருகின்றன. இடையில் - 2002 ஆம் ஆண்டு -
குஜராத்தில் உள்ள Soda Ash பிரிவை மூடுவதாக DCW அறிவித்தது. சிலமாதங்களில் அவ்வறிவிப்பு வாபஸ் வாங்கப்பட்டு மீண்டும் உற்பத்தி அங்கு
துவங்கியது.
DCW உடைய மொத்த வருமானத்தில் (2009 - 2010 ஆண்டில் சுமார் 1027 கோடி ரூபாய்) - சுமார் 20 சதவீத பங்கு அதன் குஜராத்தில் உள்ள
திராங்கத்ரா தொழிற்சாலையில் உள்ள Soda Ash பிரிவு மூலம் வருகிறது. DCW உடைய எஞ்சிய 80 சதவீத வருமானம் அதன் சாகுபுர
(காயல்பட்டண) தொழிற்சாலை மூலம் வருகிறது.
DCW உடைய சாகுபுர தொழிற்சாலைக்கான இடம் 1956 ஆம் ஆண்டு - 99 வருட குத்தகை (Lease) அடிப்படையில் - தமிழக அரசாங்கத்திடம் இருந்து பெறப்பட்டது.
2400 ஏக்கர் பரப்பளவில், 1959 ஆம் ஆண்டு முதல், Caustic Soda என்றும் Lye என்றும் அழைக்கப்படும் Sodium Hydroxide இரசாயனத்தை
உற்பத்தி செய்ய சாகுபுரத்தில் DCW உடைய தொழிற்சாலை செயல்பட துவங்கியது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross