காயல்பட்டணத்தில் புற்று நோயை எதிர்கொள்வது எப்படி? |
பாகம் - 1 <> 2 <> 3 <>
4 <> 5 <> 6 <> 7
|
நகரில் புற்று நோய் அதிகரித்திருப்பதாக சந்தேகம்படும் ஏறத்தாழ அனைவரும் - அதற்கு முக்கிய இரண்டு குற்றவாளிகளாக கூறுவது - அலைப்பேசி
கோபுரங்கள் (Mobile Towers) மற்றும் தொழிற்ச்சாலை மாசு (Industrial Pollution).
அலைப்பேசிகள் (Mobile Phones) இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக பரவலாகி உள்ளன. 10 இந்தியர்களில் 6 இந்தியர்க்கு ஓர் அலைப்பேசி
என நாட்டில் சுமார் 70 கோடி அலைப்பேசிகள் பயன்பாட்டில் உள்ளன. காயல்பட்டணத்தில் சராசரியை விட கூடுதலாக அலைப்பேசிகள் பயன்பாட்டில்
இருக்கும் என்பது நம்பதகுந்த ஓர் கணிப்பு.
நகரில் பல கட்டிடங்களுக்கு மேல் அலைப்பேசி கோபுரங்கள் (Mobile Towers) நிறுவப்பட்டுள்ளன. அதன் மூலம் அக்கட்டிட உரிமையாளர்களுக்கு
நல்ல வாடகையும் கிடைக்கிறது. நிறைய அலைப்பேசி கோபுரங்கள் நகரில் உள்ளதால் அலைபேசி சேவை சிறப்பாக இருந்தாலும் - அந்த அலைபேசி
கோபுரங்கள் நகரில் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இருப்பதால் பல விதமான அச்சங்களை ஏற்படுத்துகிறது.
புற்று நோய்க்கு நகரில் அதிகரித்துள்ள அலைப்பேசி கோபுரங்கள் (Mobile Towers) மற்றும் அலைப்பேசி உபயோகமும் (Mobile Phone Usage) ஒரு
காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுவாக உள்ளது.
விஞ்ஞானிகள் மத்தியில் இது குறித்த ஒருமித்த கருத்து இதுவரை ஏற்படவில்லை. அமெரிக்க அரசாங்கத்தின் FCC , FDA போன்ற அமைப்புகளும்,
உலக சுகாதார மையமும் (WHO) - அலைப்பேசி கோபுரங்களுக்கும், அலைப்பேசி பயன்படுத்துவதற்கும், புற்று நோய் உண்டாவதற்கும் தொடர்பு
உண்டு என கூற போதிய ஆதாரம் இப்போதைக்கு இல்லை என கூறுகின்றனர்.
பார்க்கவும் - 1
பார்க்கவும் - 2
பார்க்கவும் - 3
பார்க்கவும் - 4
பார்க்கவும் - 5
வேறு பல ஆய்வுகள் புற்று நோய்க்கும், அலைப்பேசி வளர்ச்சிக்கும் தொடர்பு உள்ளதாக கூறுகின்றனர்.
அலைப்பேசி என்பது சமீபத்திய தொழில்நுட்பம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. காலப்போக்கில் - புது ஆய்வுகள் தெளிவான ஆதாரங்களை
வெளிக்கொண்டு வரலாம். துவக்கத்தில் புகைக்கும், புற்று நோய்க்கும் தொடர்பு இல்லை என கூறப்பட்டது என்பதை இத்தருணத்தில் நாம் நினைவில்
வைத்து கொள்ள வேண்டும்.
தெளிவற்ற இச்சூழலில் அலைப்பேசிகள் குறித்து நாம் என்ன முடிவெடுப்பது?
அலைப்பேசி கோபுரங்கள் (Mobile Towers)
-- நகரில் புதிதாக வரும் அலைப்பேசி கோபுரங்களுக்கு மக்கள் வாழும் பகுதிகளில் அனுமதி கொடுப்பதை தவிர்ப்பது
-- தற்போது நகரில் உள்ள அலைப்பேசி கோபுரங்களை - அவைகள் வெளியாக்கும் சக்தி குறித்து - சோதிப்பது
-- தற்போது நகரின் உள்ளே உள்ள கோபுரங்களை மக்கள் இல்லா பகுதிகளுக்கு மாற்ற முயற்சி செய்வது
அலைப்பேசி உபயோகம் (Mobile Phone Usage)
-- அலைப்பேசிகளுக்கு என பாதுகாப்பு குறித்து Specific Absorption Rate - SAR என்ற அளவுகோள் உண்டு. அலைப்பேசியை வாங்கும் போது பாதுகாப்பானதுதானா என கவனித்து வாங்குவது. அமெரிக்காவில் SAR = 1.6 பாதுகாப்பானது என்றும்,
இங்கிலாந்தில் SAR = 1.0 பாதுகாப்பானது என்றும் கருதப்படுகிறது
-- ஒரே காதில் வைத்து தொடர்ந்து பேசாமல் காதினை மாற்றி பேசுவது
-- அலைப்பேசி பயன்படுத்துபவர்கள் கூடியவரை நேரடியாக அலைப்பேசியை காதில் வைக்காமல் Bluetooth போன்ற தொழில்நுட்ப சாதனங்கள்
கொண்டு பேசுவது
-- ஒரு நாளில் கூடியபட்சத்தில் 30 நிமிடம் வரையே அலைப்பேசி கொண்டு பேசுவது
-- வீட்டில் மற்றும் அலுவலகங்களில் இருக்கும் போது அலைப்பேசியை பயன்படுத்தாமல், சாதாரண தொலைப்பேசியை (Landline) பயன்படுத்துவது
-- குழந்தைகள், சிறுவர்கள் அலைப்பேசி பயன்படுத்துவதை தவிர்ப்பது. அவர்களின் தலை பாதுகாப்பான அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்காது என
விஞ்ஞானிகள் கூறுகின்றனர்
[தொடரும்]
காயல்பட்டணத்தில் புற்று நோயை எதிர்கொள்வது எப்படி? |
பாகம் - 1 <> 2 <> 3 <>
4 <> 5 <> 6 <> 7
|
|