DCW நிறுவனத்தை உருவாக்கிய சாஹு ஸ்ரியான்ஸ் பிரசாத் ஜெயின் (Sahu Shreyans Prasad Jain) - 1908 ஆம் ஆண்டு இப்போதைய உத்தர பிரதேஷ மாநிலத்தில் பிறந்தார். இவர் சார்ந்த சாஹு ஜெயின் (Sahu Jain) குடும்பத்தினர் இந்தியாவின் பிரபலமான பல நிறுவனங்களுக்கு சொந்தக்காரர்கள். Times of India குழுமம், Dalmia Cement போன்றவை - சாஹு ஜெயின் குடும்பத்தின் பிற அங்கத்தினரை சார்ந்தது.
1939 ஆம் ஆண்டு மேற்கு இந்தியாவில் (இப்போது குஜராத்) திராங்கத்ரா (Dhrangadhra) என்ற மாகாணத்தில் Soda Ash தொழிற்சாலையை சாஹு
ஸ்ரியான்ஸ் பிரசாத்ஜி ஜெயின் வாங்கினர். 1952 முதல் 1958 வரை ராஜ்யசபா உறுப்பினாராக இருந்த இவர் - திராங்கத்ராவில் S.S.P. Jain Arts and Commerce College என்ற கல்லூரி 1964 ஆம் ஆண்டு உருவாவதற்கும், 1981
ஆம் ஆண்டு மும்பையில் S.P. Jain Institute of Management and Research என்ற
கல்லூரி உருவாவதற்கும் உதவிகள் புரிந்தார்.
DCW வளாகம் அமைந்திருக்கும் இடத்திற்கு சாஹுபுரம் (Sahupuram) என்ற பெயர் இவரைக்கொண்டு தான் வழங்கப்பட்டுள்ளது. இவ்விடத்திற்கு என்று தனி PIN Code-ம் உண்டு (628 229). 1972 ஆம் ஆண்டு சாகுபுரத்தில் பள்ளிக்கூடம் ஒன்று துவக்கப்பட்டு, 1975 ஆம் ஆண்டு அதற்கு அவரின் மனைவி - கமலாவதி ஜெயின் உடைய பெயரும் இடப்பட்டது.
[நகரில் - ஆரம்ப காலங்களில் - ஐக்கிய விளையாட்டு சங்கத்தில் (USC) நடக்கும் கால்பந்து போட்டிகளில் வெற்றி பெற்ற அணிக்கு DCW Shield என்ற பெயரில் பரிசினை DCW நிறுவனம் வழங்கியது].
இந்திய அரசாங்கத்திடம் இருந்து 1988 ஆம் ஆண்டு பத்மபூசன் விருது பெற்ற சாஹு ஸ்ரியான்ஸ் பிரசாத் ஜெயின் 1991 ஆம் ஆண்டு காலமானார்.
இவருக்கு மகன்கள் மூவரும், ஒரு மகளும் உண்டு. இவரது மகள் சரோஜ் கோயேன்கா இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையை நிறுவிய ராம்நாத்
கோயேன்கா உடைய மருமகள் ஆவார்.
இவரின் மூத்த மகனான டாக்டர் சசி சந்த் ஜெயின் இப்போது DCW நிறுவனத்தின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனராக உள்ளார். மற்றொரு மகன் பிரமோத் குமார் ஜெயின் மற்றொரு நிர்வாக இயக்குனராக உள்ளார். சரத் குமார் ஜெயின் என்ற மகன் 2008 இல் காலமானார்.
ஏறத்தாழ (தற்போதைய நிலவரப்படி) 300 கோடி ரூபாய்க்கு மதிப்பிடப்படும் DCW நிறுவனத்தில் - செப்டம்பர் 2010 நிலவரப்படி - இவரின் குடும்பத்தினர் சுமார் 39 சதவீத பங்குகளை
தங்கள் வசம் வைத்துள்ளனர்.
வெளிநாட்டு நிறுவனங்கள் சுமார் 13 சதவீதமும், இந்திய நிதி நிறுவனங்கள் சுமார் 4.5 சதவீதமும் DCW பங்குகளை
வைத்துள்ளனர்.
இந்நிறுவனத்தின் பங்குகள் மும்பை பங்கு சந்தை (BSE), தேசிய பங்கு சந்தை (NSE) மற்றும் ஐரோப்பாவில் உள்ள லக்சம்பர்க் (Luxembourg) பங்கு
சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross