தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் காரணமாக அருகில் உள்ள ஊர்களில் புற்று நோய் உட்பட பல நோய்கள் பெருகி உள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. நேற்று சென்னையில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் நித்யானந்த் ஜெயராமன் என்ற சுற்றுப்புற சூழல் நிபுணர் இதனை தெரிவித்தார்.
ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு அருகே தெற்கு வீரபாண்டியபுரம் கிராமத்தில் மண் மாதிரி (Sample) எடுக்கப்பட்டு சென்னையில் உள்ள - மத்திய சுகாதார அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட சர்கம் லாப்ஸ் (Sargam Labs) மூலம் பரிசோதனைகள் நடந்தது. அப்போது iron, arsenic, cadmium, nickel போன்ற பொருட்கள் அவைகளில் கலந்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து ஸ்டெர்லைட் நிறுவனம் கருத்து தெரிவிக்கையில் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாகவும், இதுபோன்ற அறிக்கைகள் நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத செயல் என்றும், ஆய்வு முறை அறிவியல் பூர்வமானது இல்லை என்றும் கூறினர்.
இந்திய உச்ச நீதிமன்றம் - ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடும்ப்படி உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு பதில் தர டிசம்பர் இரண்டாம் வாரம் வரை நேரம் வழங்கியுள்ளது.
தகவல்:
Deccan Chronicle
|