முஸ்லிம் ஐக்கியப் பேரவை posted byN.S.E. மஹ்மூது (Yanbu - Saudi Arabia)[07 December 2010] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1448
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
இந்த செய்திகளின் மூலம் DCW தொழிற்சாலையினால் நம்ம ஊருக்கும், சுற்று வட்டாரங்களுக்கும் எவ்வளவு பாதிப்புகள் வருகிறது என்பது தெளிவு.
"மேலும் டெல்லி நிறுவனத்தின் அறிக்கையில் DCW பற்றி கூறும்போது - மழைக்காலம் துவங்கும் வரை DCW வளாகத்தில் உள்ள பல குளங்களில் கழிவு நீர் சேர்த்து வைக்கப்படுவதாகவும், நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் (வடகிழக்கு பருவ மழை மாதங்கள்) - கழிவு நீர் கடலுக்கு விடப்படுவதாகவும், அக்காலங்களில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது "
என்ற செய்தியை படிக்கும்போது , அவர்கள் குறிப்பிட்ட மழை காலம்தான் இது என்பதால் அவர்கள் கழிவு நீரை இப்போது கடலுக்கு விட்டுக் கொண்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்.
எனவே இன்னும் காலம் தாழ்த்தாமல் இதற்கு ஒரு தீர்க்கமான முடிவை விரைவில் எடுப்பது நல்லது.
என்னுடைய கருத்து என்னவென்றால் "காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை" இதற்கு ஒரு
திட்டம் தீட்டி, அதை எவரிடம் ஒப்படைத்தால் ஒழுங்கான தீர்வு கிடைக்கும் என்பதை ஆலோசித்து
முடிவு செய்து ஆவன செய்ய வேண்டியது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross