Re:விளையாட்டுத் துறை மாணவர்க... posted byMohmed Younus (Trivandram)[14 December 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 14514
"பஸ் சிநேகம்","ரயில் சிநேகம்" என்று ஒரு மணிநேர பயணத்திற்கு இடையிலே மனிதர்களுக்கு இடையில் ஏற்படும் சினேகத்திற்கு மத்தியில், இந்த ஆசிரியரின் 27 வருட காயல் சிநேகிதம் எளிதில் பிரிய முடியாததுதான்.
இதன் விளைவுதான் இந்த தட புடல் விருந்து என்று என்ன தூண்டுகின்றது. பொதுவாக,நமதூரின் சிநேகம் எளிதில் யாரையும் விட்டுவிடாது. இங்கு பேணப்படும்
கலாசாரம்,அமைதி,விருந்தோம்பல்,நட்போடு பழகும் தன்மை-இவற்றின் விளைவால்,நமதூர் கலாச்சாரத்தோடு எளிதில் கலந்து விடுகின்றனர். ஒரு சில நபர்கள்,சம்பவங்கள் வேண்டுமானால் விதிவிலக்காக இருக்கலாம். "லெப்பையிடம் ஓத போக வில்லையா"?, "அஷர் தொழுதிட்டியா"? "வாப்பா எப்பொழுது சபர் வருகிறார்கள்"? என்று கேட்கும் நம் வீட்டில் தலை முறை,தலை முறையாக இருக்கும் வேலைக்கார அம்மாக்களை பார்த்து இருக்கின்றோம்.
ஐம்பது வருடங்களாக ஊரில் பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்யும் கே.டி.எம்.தெரு ஆதிலிங்கம், சதுக்கை தெரு முத்து நாடார்,சமீபத்தில் மரித்த கறிக்கடை பெரிய நாடார்,எவர்கள் எல்லாம் இதற்கு உதாரணங்கள்.
" தம்பி ஐந்து ரூபாய் வியாபரம் நடந்தாலும் பரவாஇல்லை,எனக்கு இங்கு வந்து கடை தொறந்தால் தான் நிம்மதி ஏற்படுகின்றது" - இது முத்து நாடார் என்னிடம் மூன்று வருடத்திற்கு முன்பு கூறியவை. இவர்களை பற்றிய கேலி,கிண்டலுக்கு உரிய சில சுவராசியமான சம்பவங்களும் உண்டு.
காயல்பட்டினதிற்கு மாற்றம் வேண்டும் என்று விளைந்து கேட்கும் அரசு ஊழியர்களை பார்த்து இருக்கின்றோம். இதற்கு வேறு காரணங்கள் இருந்தாலும்,தலையாய காரணம் அவர்கள் நமூதரை பற்றிய நல்ல எண்ணம் தான். எந்த சூழ்நிலை தொடர்ந்து நிலை பெற இறைவன் உதவி செய்ய வேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross