Re:ஒருவழிப்பாதை குறித்து நெச... posted byDR D MOHAMED KIZHAR (chennai)[14 December 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 14554
அஸ்ஸலாமு அலைக்கும்...
இந்த கருத்தில் நான் குறிப்பிடுவதை தயவு செய்து நெசவு தெரு ஜமாஅத் சகோதரர்கள் தவறாக எடுக்க கூடாது..சின்ன நெசவு தெரு, ,அற்றும் KTM தெரு வாசிகள், அரை நூற்றாண்டுக்கு மேலாக , தங்கள் தெருவில் பஸ் போக்கு வரத்தால், அதிகம் பாதிக்க பட்டு விட்டார்கள்..இன்னும் என் சிறுவயது, அனுபவம் எனக்கு மிகவும் கஷ்டத்துடன் மேலோங்கி உள்ளது..
அனைத்து தெரிவிலும் தெரிவில் விளையாடும் விளையாட்டுகளை, என் சிறுவயதில், நானும் என்னை போன்றோர்களும் இழந்தோம்..பிற தெருவில், தெருவில் எல்லா விளையாட்டு களும் விளையாடும், போது , நாங்கள் ஒரு பொறாமையுடன் தான் அதை பார்த்தோம்..சரி அடுத்த தெருவில் போய் விளையாடலாம், என்றால் வாப்பாவின் அனுமதி கிடைக்காது..இப்படி சிறு வயது சிறு சந்தோசங்களை ,ஊருக்காக இழந்தோம்..
சரி விளையாட்ட விடுவோம்.. பல சிறிய ஆக்சிடன்ட் ஏற்பட்டது.. தெருவில் பிள்ளைகளை வெளியை விட்டு விட்டு , தாய் மார்கள், வாசலில் நின்று உயிரை கையில் பிடித்து கொண்டு தான், மன படபடப்போடு காலம் தள்ளுகிறது..
ஏழு கல் மற்றும் கிச்சி கம்பு விளையாடும் போது, பஸ்ஸில் பந்தோ அல்லது கம்போ விழுந்து, அந்த பஸ் நின்று , எங்களை பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் திட்டியது மட்டும் இல்லாமல், வீட்டில் வந்து வாப்பா உம்மா விடம் பெற்ற அடி இன்னும் மறக்க முடியாது
எனவே, ஏரவது ஒருவர் விட்டு கொடுத்து, ஒரு வழி பாதை ஆக்கினால், எங்கள் தெரு சிரமம் சற்று குறையும்..நாங்கள் எங்கள் தெருவில் முழுவதுமாக, போக்கு வரத்தை நிறுத்த சொல்ல வில்லை..சற்று நெருக்கடியை குறைக்க சொல்கிறோம .. இதில் பரந்த மனப்பான்மை வேண்டும்..எங்கள் தெருவாசிகளும், பூர்வீக குடிருப்பு தான்..
ஆக்கிரமைப்பு அகற்றுதல் இருந்து எல்லாவற்றிலும் எங்கள் தெரு தான் பாதிக்க பட்டது..எங்கு தான் ஆக்கிரமிப்பு இல்லை.
இதில் சுயம் நலம் பார்க்காமல், எங்கள் தெருவாசிகள் போல பொது நலம் கருதி , ஒரு வழிப்பாதைக்கு , விட்டு கொடுத்து வழி வகி செய்ய வேண்டும்..
இல்லாவிட்டால் சுழற்சி முறையில் ஊரில் உள்ள எல்லா தெருவையும் போக்கு வரதுக்கு பயன் படுத்தலாம்.
குழந்தைகள், விளையாடும் விஷயத்தை பற்றி குறித்து இருந்தீர்கள்.. அப்படி என்றால், KTM தெரு ,அற்றும் சின்ன நெசவு தெரு குழந்தைகள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள் விளையாட்டை அர்பணிக்க அல்லது இந்த தெரு குழந்தைகள வேறு பொம்மை அல்லது கால் நடை களா....
எங்கள் தெருவிலும் கல்யாணம் போன்ற விசய்சங்களுக்கு இரட்டை செலவு.. வீட்டு முன் பந்தல்.. சங்கத்தில் ஒரு பந்தல்;...கல்யாண விசய்சங்களை ஒரு காரணமாக குறிப்பிடுவது ஏற்புடையது அல்ல. இப்போது ஒற்றில் அநேக கல்யாணங்கள் பொது சங்கத்தில் தான், அதுவும் மற்ற தெரு சங்ககளில் நடக்கிறது...
ஒரு வேண்டுகோள்.. ஊர் மக்களுக்கு.. இத்தனை ஆண்டுகளாக எங்கள் தெரு செய்த தியாகர்த்திர்க்கு , இந்த நன்றியாக, விசயச அந்தஸ்து வழங்க வேண்டும்..அரசி பனி மற்றும் கல்வியில் நலிவுட்டோர்க்கு தனி இடவொதுக்கீடு வழங்குவதை போல், ஊரில் எல்லா விசயங்களுக்கும் எங்கள் தெருவுக்கு அதிகம் முக்கியத்துவம் தர வேண்டும்..
நகராட்சி பனி, குடிநீர் விநியோகம், சுகாதார பணிகள், மற்றும் எல்லா வற்றிலும் அதிக பிரதிநிதுவமும், ,மற்றும் அதிக ஒதுக்கேடும் செய்ய வேண்டும்..பள்ளி admission போன்ற வற்றிலும் தியாகம் செய்த தெரு பிள்ளைகளுக்கு உடனடி சீட் தரவேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross