Re:துளிர் நிறுவனர் வழக்கறிஞர... posted bymackie noohuthambi (kayalpatnam)[15 December 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 14570
வாழ்த்துக்கள்.2011 ரின் விளிம்பில் நின்று பார்த்தால் துளிரின் வளர்ச்சி பரவசமூட்டும். ஆனால் இந்த விருதுக்கும் தகுதிக்கும் நீங்கள் கொடுத்துள்ள விலைகள் சாதாரணமானவை அல்ல. எரிட்டுப்பார்ககூட நாதியில்லாத நேரத்தில் நீங்கள் தனி ஒருன்வராக நடத்திய மனப்போராட்டங்கள் உங்களுக்கே தெரியும்.
துளிர் விருட்சமாக இன்று வளர்ந்து எதனை உடல் ஊனமுற்றவர்களுக்கு ஊக்கமளித்து அவர்களை சாதனயாளர்களாக மாற்றிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் பேக்கரி தொழிலையும் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் நானும் கலந்து கொண்டேன். நிகழ்ச்சி ஒரு நெகிழ்ச்சியையே ஏற்படுத்தியது.
சகோதரர் ஷேக்னா அவர்கள் உங்களுக்கு தோள் கொடுக்கிறார்கள். தம்பி தீபி ஆற்றிய சேவைகளையும் நான் நினைத்துப்பார்க்கிறேன்.எவ்வளவு பெரிய தியாக உணர்வுடன் செயலாற்றும் ஆசிரியர்களையும் ஆசிரியைகளையும் நான் நன்றியுடன் நினைத்து பார்கிறேன்.
எப்போதோ ஒரு முறை அங்கு சென்று வரும் போது.கண்கள் குளமாகிறதே, தினசரி அந்த மாற்றுதிரனாளிகளுடன் காலத்தை கழிப்பவர்கள் உணர்வுகள் எப்படி இருக்கும் என்பதை நினைத்து பார்க்கும்போது அடி வயிற்றில் அமிலம் சுரக்கிறது. அல்லாஹ் உங்கள் எல்லோரது சேவையையும் பொருந்தி கொள்வானாக .
உங்களுக்கு கிடைத்த விருதை துளிருக்கு அர்ப்பணம் செய்யும் உங்கள் அவையடக்கம் என்னை மெய் சிலிர்க்கவைக்கிறது. பேருக்கும் புகழுக்கும் அலைந்து திரியும் நவீன யுகத்தில் இப்படியும் ஒரு சிலர் இருப்பதால்தான் நல்லோர்க்கு பெய்யும் மழை எல்லோர்க்கும் என்று வானம் பொழிந்துகொண்டிருக்கிறது.
தொடரட்டும் உங்கள் சேவை. ஆனால் இப்படி ஊனமுற்றோர்கள் சிறப்பு பள்ளிகள் பெருகட்டும் என்ற பிரார்த்தனையை மாற்றி இது போல் இனி யாரும் பிறக்காமல் அல்லாஹ்வே நீ காப்பாற்று என்று அல்லாஹ்விடம் பிரார்த்திப்போமாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross