வாழ்த்துக்கள்... posted byMohamed Buhary (Chennai)[15 December 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 14575
வழக்கறிஞர், அஹ்மத் அவர்கள் நான் அறிந்த காலத்திலிருந்து பல்வேறு பொதுநிறுவனங்களுடன் தொடர்புடையவராகவும் பொதுசேவை மனப்பாங்குடையவராகவும் திகழ்வது உண்மையிலேயே பாராட்டத் தக்க வரவேற்கத் தக்க அம்சமாகும். இது போன்ற ஆளுமைகள் [Personalites] கண்டெடுக்கப்பட்டு அவர்கள் கௌரவிக்கப்படுவதுடன் அவர்களுக்கான அங்கீகாரத்தையும் சமூகம் அளிக்க வேண்டும். குறிப்பாக நமதூர் மக்கள் இதுபோன்றவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். இன்னும் இதுபோன்றவர்கள் ஏராளம் உள்ளனர். அத்தகையோரையும் நாம் இனம் கண்டு அவர்களையும் அவர்களின் சேவை மனப்பாங்கையும் ஊக்கப்படுத்தி அவர்களின் சேவைக்கான அங்கீகாரத்தை அளிக்க முன்வர வேண்டும். அப்போதுதான் செயல்களம் காணும் இதுபோன்றவர்கள் தொடர்ந்து இயங்குவதற்கான உந்துசக்தியாக அது விளங்கும்.
இதுபோன்ற பொதுசேவைகள் சமூகக் கடமை மட்டுமல்லாது மார்க்கக் கடமை என்பதை உணர்ந்து செயலாற்றும்போது, அவற்றுக்கான பிரதிபலன் இம்மையிலும் உண்டு; மறுமையிலும் நிச்சயமாக உண்டு. எந்தவோர் செயலைப் புரிவதானாலும் அவற்றில் இறைநெருக்கமும் இறைதொடர்பும் உள்ளதாக அமைத்துக்கொள்ளும்போது இரட்டை பலனை அடைந்த மனத்திருப்தியும் உண்டாகும்.
நமதூர் மக்கள் வணிகச் சமூகம் என்ற பெயர் பெற்றவர்கள்; கடந்த காலங்களில் நம் முன்னோர் வணிகம் சார்ந்து சென்ற இடங்களிலெல்லாம் மார்க்கக் கடமைகளையும் ஆற்றியுள்ளார்கள் என்ற வரலாறு உள்ளது. இன்றைய நவீன உலகில் அந்த மனப்பாங்கு மாறி எதையும் இலாபக் கணக்குடன் அணுகக்கூடிய மனப்பாங்கே மிகைத்து காணப்படுகிறது. இதில் விதிவிலக்குகள் இருக்கலாம்.
ஆனால், காலத்தின் தேவையையும் கட்டாயத்தையும் கருதி, பொதுச்சேவை மனப்பாங்கு மிகைக்க வேண்டும். அதற்காக எல்லாவற்றையும் கைவிட வேண்டும் என்பதல்ல. இதை ஒரு பேசும் பொருளாக நமக்குள் ஆரோக்கியமான கலந்துரையாடலை இவ்விணையதளம் வாயிலாக தொடங்கலாம். ஏற்கெனவே இது குறித்து ஒரு தலையங்கம் ஆரம்பமாக வந்தது குறிப்பிடத் தக்கது.
அட்மின் அவர்களே.... அந்தத் தலையங்கத்தின் இணைப்பை இதில் இணைக்கவியலுமா...?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross