Re:ஹாஜி பி.மஹ்மூத் மறைவை முன... posted byT.M.RAHMATHULLAH & Family (KAYALPATNAM 04639 280852)[15 December 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 14606
அஸ்ஸலாமு அலைக்கும்.!
கணம் மொடரேட்டர் அறிவது இந்த செய்திக்காக முன்பு கொடுத்த காமன்ட்சில்(சி ஆர் நம்பர் 15458 )சில திருத்தங்கள் செய்திருப்பதால் அதை நீக்கிவிட்டு கீழ வரும் செய்தியை தயவு செய்து போட வேண்டுகிறோம்
பிஸ்மிஹீ தஆலா!
” அத்துன்யா ஸா அ ,லைஸ ஃபீஹா றாஹ, ’” “ மன் லம் யஷ்குரின்னாஸ லம் யஷ்குரில்லாஹ.’ - நாயக மொழி’
நன்றி மறப்பது நன்றன்று – தமிழ் நாட்டுப் பொன் மொழி.
அஸ்ஸலாமு அலைக்கும்! அல்ஹம்து லில்லாஹ்.!!!
எங்கள் குடும்பத்தலைவரும், நமதூரில் ஒருசில மூத்த தலைவர்களில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களில் ஒருவருமான மற்ஹூம் B. மஹ்மூது ஹாஜி (வயது 92.ஹிஜ்ரி கணக்கில் 95 ) அவர்களின் (13-12-2011 =செவ். ஹிஜ்ரி 1433 முஹற்ரம் 17 ல்) நடந்த மரணத்திற்கு நேரில் வந்தும் ,ஃபோன்கள், வெப்ஸைட்கள் மூலமும், ஆறுதல்களும், அனுதாஃபங்களளும் கூறிவரும் அனைவர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும், ஜனாஸா சம்மந்தப்பட்ட நான்கு ஃபற்ழுகள், முதல் அநேக ஸுன்னத்தான அமல் முறைகளில் ஈடுபட்டும், கலந்தும் உதவி ஒத்தாசைகள் செய்த வர்களுக்கும் மனமாற நன்றி கூறுகிறோம்.
அதாவது ஜனாஸா தொழுதும், தொழவைத்தும், துஆ, ,தல்கீன், ஃக்த்தம், ஃபாத்திஹா, திலாவத்தில் குற் ஆன் , முதலான அமல்,இபாதத் களில் ஈடுபட்டு மற்ஹூம் அவர்களுக்கு ஈஸால் ஃதவாபை செய்தும், A to Z எல்லா உதவி ஒத்தாசைகளிலும் ஈடுபட்ட அத்தனை நல்லுள்ளங்களுக்கும் நன்றி.
குறிப்பாக மற்ஹூம் அவர்களின் தன்னலமற்ற சேவைகளை நினைவிற்கொண்டு காயல் பட்டணம் அறூஸுல் ஜன்னஹ் மத்றஸது நிஸ்வானிலும், ஹாங் காங் கவ்லூன் ஜாமி ஆ மஸ்ஜிது-இஸ்லாமிய ஸெண்டெரிலும், ஃகத்முல் குற் ஆன் ஓதி துஆ செய்து “ஸலாம் “மஜ்மூஆ “ நடத்திய நல்லுள்ளங்கள் அனைவருக்கும்.,குருவித்துறைப்பள்ளி ஜமாஅத், மற்றும் நிர்வாகிகள், எல்லலோருக்கும், இன்னும் எ ல் .கே எஸ் குழுமத்தைச் சார்ந்த பாடசாலைகளில் மற்ஹூம் அவர்களின் நன்றி மரியாதை குறித்து, விடுமுறை அளித்து, இரங்கல் கூட்டங்களும் நடத்தியும் கவுரவித்தமைக்கும் நன்றி கூறுகிறோம்.
அத்துடன் மற்ஹூம் பி. மஹ்மூது அவர்கள் தமது 14 வயது முதல் ஆயுளின் கடைசி ஸெகண்டு வரை தஸ்பீஹ், தஹ்லீலுடன், இடைக்கிடை ஊர் நலன் களைப்பற்றி கவலை கொண்டவர்களாகவே ஊர் பிரமுகர்களோடு உரையாடிக் கொண்டிருந்ததை மறக்க முடியுமா? எண்பது ஆண்டுகாலமாக காயலின், கல்வி, குடி தண்ணீர்,மார்க்கம்,தப்லீக் மருத்துவம் போன்ற சேவைகளுக்கு வாழ்வை அற்பணித்த இத்தகைய மாமனிதரை, கவுரவிக்கும் முகமாக சென்ற 2011 ஜூலை 8.9.,10 செவ். =6,7,8 ஸஃபற் 1432 ன் போது நமதூரில் நடந்த இஸ்லாமிய தமிழ் இலக்கிய 15வது மாநாட்டில் “ சேவைச்செம்மல் “எனும் மிக உயரிய விருதுவை வழங்கி கண்ணியப்படுத்திய மாநாட்டு தலைவர் மற்றும் அங்கத்தினர் அனைவருக்கும் உள்ளர்ந்த நன்றியினையும் தெரிவிக்க்றோம்.
இன்னும்,மற்ஹூம் அவர்களின் அநதிமகால மருத்துவத்தில் முறையான உதவிகளையும் செய்த டாக்டர்மார்கள்,தூத்துகுடி அருள்ராஜ், ஆத்தூர் சங்கர் மற்றும் காயல்.KMT, மருத்துவமனைகளின் நிர்வாகிகள், பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி செலுத்துகிறோம்.
மேலும் முறைபோல் உடனுக்குடன் இண்டெர்னெட்டில் உலகளாவ மரணச்செய்தி பரிமாற்றங்கள் செய்த மூன்று காயல் வெப்ஸைட்டர்களுக்கும் மனிச்சுடர் முதலான பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான நறிகூலிகளை தந்தருள்வானாக என நன்றியுடன் துஆ செய்கிறோம். JAZZAA UKUMULLAAHU KHAIRAL JAZAAU..
இவ்வண், B. மஹ்முது ஹாஜி அவர்களின் குடும்பத்தார்கள் சார்பாக,
மருமகனார்.தைக்கா றஹ்மத்துல்லாஹ், 56 A. DEEVU STREET KAYALPATNAM. 628204. PHONE 280852. MOB. 8122407211. E Mail . rahmathullahtm38@hotmail.com
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross