ஒழுக்கங்கள் உயர ... posted byN.S.E. மஹ்மூது (காயல்பட்டணம் )[15 December 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 14629
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
பணி தர உயர்வு பெற்று, தீவுத் தெரு அரசு மகளிர் பள்ளியின் தலைமை ஆசிரியையாக பொறுப்பேற்றிருக்கும் முஹம்மது ஆய்ஷா அவர்களை வருக, வருக என வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
------------------------------------------------
தேர்ச்சி விகிதம் மேலும் சிறக்க :
தலைமை ஆசிரியையாக பணியாற்ற வந்திருக்கும் முஹம்மது ஆய்ஷா அவர்கள் மிகுந்த அனுபவம் பெற்றவராகவும் , நமது பள்ளியிலேயே மூன்று ஆண்டுகள் பணியாற்றியும் இருப்பதால் சிறந்த முறையில் நமது பள்ளியை நிர்வகிப்பார் என்று எதிர் பார்க்கிறோம்.
கடந்த காலங்களில் பள்ளியின் தேர்ச்சி மிக சிறப்பாகவே இருந்திருக்கிறது - வருங்காலத்திலும் தேர்ச்சி விகிதம் மேலும் , மேலும் சிறக்க உதவிடுவார் என்றே பிரார்த்திக்கின்றோம்.
------------------------------------------------
வேண்டுகோள் :
தலைமை ஆசிரியை அவர்கள் மாணவிகளின் படிப்பு உயர்வடைய பாடுபடுவதோடு மட்டுமல்லாமல் அவர்களின் ஒழுக்கங்கள் உயரவும் , கலாச்சாரம் மற்றும் தமிழர் பண்பாடு பேணப்படவும் கவனம் செலுத்திட வேண்டுகிறோம்.
மேலும் மழைக்காலமாக இருப்பதால் தங்கள் பள்ளியை சுற்றி தண்ணீர் தேங்கி நிற்கின்றது அதனால் மாணவிகள் பள்ளியினுள் செல்ல, வழியே வர சிரமம் ஏற்படுகிறது - இதை தாங்கள் எழுத்துப்பூர்வமாக நமது நகராட்சிக்கு தெரிவித்தால் இன்ஷா அல்லாஹ்! உடனே அவர்கள் அந்த தண்ணீரை அப்புறப்படுத்தி தருவார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross