Re:ஒருவழிப்பாதை குறித்து நெச... posted byஹைதர் அலி (Riyadh)[16 December 2011] IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14653
அன்பிற்குரிய சகோதரர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
எந்த ஒரு திட்டமும் அமுல் படுத்த யோசிக்கும்பொழுது அந்த திட்டத்தால் பாதிக்கப்படுவோம் என நினைக்கும் மக்களின் உணர்வுகளை மதித்து அவர்களுடைய கருத்தையும் அறிந்து அவர்களின் கருத்துக்களில் நியாயம் இருந்தால் அதை பரிசீலிக்கவும், இல்லையெனில் சகோதர வாஞ்சையுடன் அவர்களுக்கு விளக்குவதும் கடமையல்லவா? ஏன் மறந்து விட்டோம் ?
நாட்டில் பல திட்டங்களில் தற்பொழுது ஒரு சாரார் அதனால் தங்களுக்கு பாதிப்பு என்றும் மற்றொரு சாரார் அந்த வாதத்தில் உண்மையில்லை என்றும் கூறி, இன்று நாடே அமலிப்பட்டுக் கொண்டிருப்பது போன்ற உணர்வுகள் நம் காயல் மாநகரத்திலும் எழ வேண்டுமா?
இந்த அறிக்கையை பதிவு செய்துள்ள சகோதரர் கூறியுள்ள முக்கியமான கருத்தை லாவகமாக கண்டுக்கொள்ளாமல் ஒரு சில கருத்துக்களை மட்டும் பெரிது படுத்தி, கருத்து பதிவு செய்துள்ள சகோதரர்களே, இது உங்களுக்கு அழகு தானா ?
அப்படி அவர் என்னதான் சொல்லியிருக்கிறார்?
ஒன்று
" தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.தீபக் டாமோர் அவர்கள், காயல்பட்டினத்தில் ஒருவழிப்பாதைக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆறுமுகநேரி காவல்துறையை ஆய்வு செய்யக் கேட்டுக்கொண்டதின் பேரில், கடந்த 2008ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஆய்வு செய்யப்பட்டு வழங்கப்பட்ட ஆய்வறிக்கையில், காயல்பட்டினம் மெயின் பஜாரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை சரிசெய்யலாம் என பரிந்துரை செய்துள்ளனர். இப்பரிந்துரை, 17.06.2008 தேதியில் வெளியான தினத்தந்தி நாளிதழின் நெல்லை பதிப்பில் செய்தியாக வெளிவந்துள்ளது."
காவல் துறை ஆய்வாளரே ஆய்வுக்குப்பின் சமர்பித்த அறிக்கையைத்தானே அமல் படுத்த கூறுகிறார்?
நமது நகராட்சியின் இரண்டாவது கூட்டத்தில் ஒரு உறுப்பினர் அவர்கள் மெயின் ரோட்டில் உள்ள பழுதடைந்த நிலையில் உள்ள பயணிகள் நிழற்குடை பற்றி பேசும்பொழுது நிழற்குடையின் கீழ்பக்கம் ஆக்ரமிப்பு இல்லாமலும் மேற்புறம் ஆக்கரமிக்கப்படிருப்பதாகவும், நிழற்குடையை புதுப்பிப்பதினால் ஆக்கிரமிப்புக்கு நகராட்சியே துணைபோகக்கூடாது என்று தந்து கருத்தை பதிவு செய்துள்ளாரே அது இந்த வலை தலத்திலேயே செய்தியாகவும் வந்துள்ளதே, அதை கருத்து பதிவு செய்துள்ள சகோதரர்கள் கவனிக்கவில்லை போலும்..
இரண்டு
" இந்த ஒருவழிப்பாதையை பெரிய நெசவுத்தெரு வழியாக அல்லாமல், ஏற்கனவே பலரால் அறிவுறுத்தப்பட்டபடி மாற்று வழியில் அமுல்படுத்த வேண்டுகிறோம்.
அடுத்து, 1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், காயல்பட்டினம் பேரூராட்சியின் நிர்வாக அதிகாரியாக இருந்த அ.மு.செய்யது முஹம்மது அவர்கள் வழங்கிய மாற்று வழிப்பாதை திட்டத்தின் ஆவணப் பரிந்துரையும் நிறைவேற்றத் தகுந்ததாகும் என்று கருதுகிறோம்.
ஆக, முற்காலங்களில் இதுபோல் அறிவுறுத்தப்பட்ட எந்தப் பரிந்துரையையும் கருத்திற்கொள்ளாமல், நமதூரிலுள்ள சில அமைப்புகள் மற்றும் ஊரின் முக்கியஸ்தர்கள் எல்லாம் சேர்ந்து, எங்களை (நெசவு ஜமாஅத்தார்களை) ஒரு பொருட்டாகக் கூட மதிக்காமல், எங்கள் பெரிய நெசவுத் தெரு வழியாக ஒருவழிப்பாதையை நடைமுறைப்படுத்தியே தீருவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுவதை நாங்கள் மிகுந்த வேதனையுடன் கண்டிக்கிறோம். " என்று அவர் வேதனயுடன் பதிவு செய்துள்ள வார்த்தை (எங்களை (நெசவு ஜமாஅத்தார்களை) ஒரு பொருட்டாகக் கூட மதிக்காமல்),உங்கள் மனதி நெருடல் ஏற்படுத்ட வில்லையா?
காயல்பட்டினம் பேரூராட்சியே வழங்கிய மாற்று வழிப்பாதை திட்டமிருப்பதை நம்மில் எத்தனை பேர் அறிவோம்? பேருராட்சியே முன்னர் பரிந்துரைத்த அத்திட்டமிருப்பதை சகோதரர் தனது அறிக்கையில் தெரிவித்த பின்னரும் ஏன் அதன் சாதக பாதகத்தை நம்மில் ஒருவரும் சுட்டிக்காட்ட முற்படவில்லை ?
"கடந்த 19.08.2009, 11.06.2010, 27.11.2011 ஆகிய தேதிகளில், நமதூரின் சில முக்கியஸ்தர்கள் முன்னிலையில் அதிகாரிகள் ஒரு வழிப்பாதைக்கான பேருந்து போக்குவரத்து ஒத்திகையை எங்கள் பெரிய நெசவுத்தெரு வழியாக மேற்கொண்டனர். ஆனால் இதுகுறித்த எந்தவித முன்னறிவிப்பும் எங்களுக்கு (நெசவு ஜமாஅத்தாருக்கு) வரவில்லை. என்றும் 27.11.2011 அன்று, எங்கள் பெரிய நெசவுத் தெருவையும் உள்ளடக்கிய 11ஆவது வார்டின் உறுப்பினர் கூட அதில் கலந்துகொள்ளாத நிலையில், இதர உறுப்பினர்கள் பலரையும், எங்கள் பெரிய நெசவுத் தெருவைச் சாராத பொதுமக்கள் சிலரை முன்வைத்தே, திருச்செந்தூர் கோட்டாட்சியர் (சப்-கலெக்டர்) பொற்கொடி அவர்களை வைத்து ஆய்வை நடத்தி முடித்துள்ளனர்." என்றும் சகோதரர் அறிக்கையில் கூறியிருப்பது நமதூரின் ஒற்றுமைக்கு முக்கியஸ்தர்களும் நகராட்சி மன்ற உறுப்பினர்களும் எந்த அளவு முக்கியத்துவம் தருகிறார்கள் என்பதனை உணர்த்துகின்றதே.
சென்ற 2010 ஆம் ஆண்டு ஆய்வு நடக்கும் பொழுது தெரு வாசிகளிடமும் கருத்து கேட்க வேண்டுமே என்று காவல் துறை ஆய்வாளர் அவர்கள் கூறிய பொழுது அவர்களிடமெல்லாம் கேட்கத்தேவையில்லை என்று ஐக்கியபேரவையைச்சார்ந்த ஒருவர் பிரபுத்தனமாக கூறியது, ஊர் நெசவுத்தேருவை எந்த அளவுக்கு மதிக்கிறது என்று படம் பிடித்து காட்டவில்லையா?
“ஊரின் பொதுநலன் கருதி... பொதுநலன் கருதி...” என்று தொடர்ந்து கூறுபவர்கள், தங்கள் தெருவில் நடக்கும் ஒருவழிப்பாதை தங்களுக்கு தெரிவிக்கப்படாமலேயே இன்று வரை மர்மமாக நடத்தப்படுவதை அங்கீகரிக்கிறார்களா? என்றும் தங்கள் தெருவை முன்னிறுத்தி செய்யப்படும் ஒரு திட்டத்தில் தங்களை (நெசவு ஜமாஅத்தார்களை) அணுகாது, பிற தெரு மக்களைக் கொண்டு ஒருதலைப்பட்சமாக செயல்பாடுகள் இருக்கின்றன என்றும் சகோதரர் கேட்பதில் நியாயம் இல்லை என்று நினைகின்றீர்களா?
தங்கள் தெருவை ஒருவழிப்பாதையாக்கும் திட்டத்தைத் தவிர்த்து, திரு.தீபக் டமோர் உத்தரவின்படி சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையின் படி ஆக்கிரமிப்புகளை அகற்றியோ அல்லது 1990இல் காயல்பட்டினம் பேரூராட்சி நிர்வாக அதிகாரி அ.மு.செய்யது முஹம்மது அவர்கள் வழங்கிய மாற்று ஒருவழிப்பாதை திட்டத்தையோ பரிசீலித்து, அதன்படி செயலாற்றுமாறு அதிகாரிகளை கேட்டுக்கொள்வதுடன், இத்திட்டத்தை ஆதரிக்குமாறு ஊர் மக்களையும் அன்பொழுக கேட்டுக்கொள்கிறோம் என்று சகோதரர் வின்னப்பித்திருப்பதை திறந்த மனதுடன் ஆய்வு செய்து உணர்வுகளை மதித்து, கலந்து பேசி, ஊருக்கும் பலன் கிடைக்க வேண்டும் அதே நேரத்தில் பாதிப்புகளும் குறைவாக இருக்கவேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு, நாம் எழுதும் வலைதள கருத்துக்கள் ஊரின் ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்படுத்தி விடக்கூடாது என்ற உணர்வு நம் அனைவரிடமும் பிரதிபலிக்க வேண்டும் என்பதனை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
பேருந்து செல்வதால் சிரமதிற்குல்லாகியிருக்கின்றோம் என்று கூறும் சகோதரர்களின் உணர்வுகளை மதிக்கின்றோம். அதே போன்று இனி வரப்போகும் மாற்று வழிப்பாதை திட்டத்தில் அவ்விதம் ஏற்படும் சிரமங்களை முடிந்த அளவுக்கு குறைக்க, ஏற்கனவே காவல் துறை மற்றும் பேரூராட்சி அரசு அதிகாரிகளால் சமர்பிக்கப்பட்ட மாற்று திட்டங்களையும் பரிசீளிப்போம். வல்ல இறைவன் கண்டிப்பாக நமது ஊரின் ஒற்றுமைக்கு குந்தகம் வராத நல்ல முடிவை தருவான் இன்ஷா அல்லாஹ்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross