Re:ஒருவழிப்பாதை குறித்து நெச... posted byஹைதர் அலி (Riyadh)[16 December 2011] IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14681
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ
பேருந்து ஏற்கனவே செல்லும் வழித்தடத்தில் வசிக்கும் இளவல்களின் கருத்துக்களில்/வாசகங்களில் தவறுகள் இருகின்றன என நாம் நினைப்பினும் அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால் சில சகோதரர்களோ, வலை தளத்தில் தமது கருத்தும் பேசப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் உண்மை நிலை அறியாமல் அள்ளி தெளித்திருக்கின்றார்கள்.
அதே நேரத்தில் சில சகோதரர்கள் மிக நடு நிலையோடு போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் ஆக்கிரமிப்பு என்பதனை உணர்ந்த்வரகலாய், அவ்வாக்கிரமிப்பு அகற்றப்பட்டால் பாதை விரிவாக்கமாகும் என்றும் அல்லது ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட மாற்று வழித்தடத்தையும் பரிசீலிக்கலாமே என கருத்து பதிவு செய்திருப்பது மனிதாபிமானம் இன்னும் உயிருடன் தான் இருக்கின்றது என்பதனை எடுத்து காட்டுகிறது.
பெரும் பெரும் பிரச்சினைகள் எல்லாம் சுமூகமாக தீர்க்கப்படும் பொழுது, அனைவருக்கும் நல்ல பலன் கிடைக்க வேண்டும், அதே நேரத்தில் பிறருக்கு சிரமங்களும் முடிந்த அளவு குறைவாக இருக்க வேண்டும் என்று நாம் சிந்த்தித்தால் தீர்வு கிடைக்காதா என்ன?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross