Re:ஒருவழிப்பாதை குறித்து நெச... posted byCnash (KTM Street) (Makkah )[16 December 2011] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14691
அஸ்ஸலாமு அலைக்கும்,
என்ன தான் சமூக பார்வை, தொலைநோக்கு சிந்தனை, பொதுநலம் என்று பலபரினாமங்கள் இருந்தாலும், தான் மற்றும் தான் சார்ந்து இருக்கும் சமூகம், மக்கள், இனம் என்று வரும்போது சில உண்மைகள் கூட உணர்வால் மழுங்கடிக்கபடுகிறது!! இது நாம் வாழும் நாட்டில் வழக்கமாக காணும் காட்சிதான் என்றாலும், இன்று இது போல சிந்தனை நம் மதிப்பிற்குரிய ஹைதர் காக்கா அவர்களின் கருத்திலும் பிரதிபலித்திருப்பது துரதிஷ்டவசமானதே!!!
முதலில் நீங்கள் மேற்கொள்காட்டியிருக்கும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பரிந்துரைப்படி KTM தெரு, மெயின் ரோடு, அகலபடுத்தபட வேண்டும் என்பது எதற்கு என்று திரும்ப ஒரு முறை படித்து பாருங்கள்!! சம்பந்தபட்ட தெரு பொதுமக்கள் ஒரு வழி பாதைக்கு மறுப்பு தெரிவிப்பதாலும்!! வேறு சில தெருக்கள் குறுகலாகவும் இருப்பதால் ஒரு வழி பாதை அமுல்படுத்த இயலாது என்பதால் தான்... மீண்டும் ஆக்கிரமிப்பு அகற்றப்பட வேண்டும் என்ற பரிந்துரைக்கு அவர் தள்ளபட்டு இருக்கிறார்.
சரி.. அவர் பரிந்துரையில் முன்னரே 2006 இல் எங்கள் தெருவில் சப்-கலெக்டர் உத்தரவின் படி ஆக்கிரமிப்பு என்று அவர்களாகவே ஒரு நிர்ணயம் செய்து சில வீட்டு முன்புற கோட்டைகள், பால்கனிகள், படிகட்டுகள், மேலும் 3 வீட்டின் முன்புறம் ஒரு அறையையே (ஜான்ஸ்) இடிக்க சொல்லி அறிவுறுத்தப்பட்டது...நாங்களும் ஊர் நன்மை கருதி எந்த ஒரு பதில் நடவடிக்கைக்கும் (STAY ORDER உட்பட) போகாமல் நாங்களே முன் வந்து இடித்தோம்... அதனால் நஷ்டம் இன்று வரை எங்களுக்கு தான்!!
ஆனால் போக்குவரத்துக்கு என்ன பயன் என்று சொல்லமுடிமா!! அவர்களின் அறிவுகெட்ட அளவீட்டின் படி ஒரு வீட்டில் கோட்டை இடிபட்டது !! அதுக்கு பக்கத்தில் அடே அளவில் முன்னோக்கி உள்ள மற்ற்றொரு கோட்டை இன்னும் கம்பீரமா நிற்கிறது!! காரணம் 1960 க்கு முன் நெடுச்சாலை துறை என்ற ஒன்று வரும் முன்னரே உரிய அனுமதியுடன் அவர்கள் சொந்த இடத்தில் கட்டிய கோட்டை!! எனவே உரியவரில் நிலங்கள் தான் நெடுஞ்சாலை என்ற பெயரில் ஆக்கிரமிப்பு செய்யபட்டு இருக்கிறது என்பது இதில் இருந்தே தெரியவில்லையா!! அப்படி என்றால் இந்த விரிவாக்கத்தால் KTM தெரு போக்குவரத்திற்கு என்ன நன்மை வர போகிறது, என்று நடுநிலை என்று இங்கே வந்து கருத்து சொல்பவர்கள் சிந்தித்து சொல்லட்டும்?
சரி மெயின் ரோட்டில் சில ஆக்கிரமிப்பு இருப்பது உண்மைதான்.. அவை எல்லாம் மிஞ்சி போனால் 5 அடி என்ற அளவிற்குள்தான் வரும்!! அந்த இடங்களை மட்டும் மீட்டு எடுத்தால் போக்குவரத்து நெரிசல் சீராகும் என்று நீங்கள் நினைகிறீர்களா? சொல்லுங்கள்!!! நீங்கள் சொன்ன அந்த நிழற்குடை முழுவதுமே உள்ள நீளத்தை அளந்து அதுவரை உள்ள எல்லா ஆக்கிரமிப்புகளை அகற்றினாலும் கிடைக்கும் 5 அடி அதிகம் நிலம் இப்போதுள்ள போக்குவரத்துக்கு போதுமானதா?
மாற்றுவழிபாதை, VAO செய்யத் அஹ்மத் காட்டிய வழி என்று ஒன்றை எல்லோரும் மறந்து விட்டதாக சுட்டி காட்டி இருக்கும் ஹைதர் அலி காக்கா, அந்த மாற்றுவழி ஏற்புடையது அல்ல, தெருக்கள் குறுகலானது என்று அதே காவல்துறை கண்காணிப்பாளர் சுட்டிகாட்டி உள்ள அறிக்கையை ஏன் உங்கள் வசதிக்காக மறந்து விட்டீர்கள்? மேலும் நீங்கள் சொல்லும் காரணங்கள் எல்லாம் அந்த மக்களும் சொல்லமாட்டார்களா? அந்த தெருக்கள் குறுகலாக உள்ளதால் அவர்களுக்கு உங்களை விட அதிகமான கரணங்கள் உள்ளது என்பதையும் உங்கள் சிந்தனைக்கும், ஆதில் ஐதுரூஸ், அவர்கள் சொன்ன கருத்துக்கும் விட்டு விட்டுவிடுகிறேன்.!!
மேலும் சம்பந்தபட்டவர்களுக்கு தெரியாமல் அவர்கள் திட்டம் நடக்கிறது என்று நீங்கள் சொல்லும் கருத்தில் உண்மை இருக்கிறதா? இந்த திட்டம் நேற்று இன்று நடைபெறும் திட்டம் அல்ல!! 1986 அமைச்சர் KPK காலத்திலே திட்டம் ஒப்புதல் அளிக்கபட்டு நிதி ஒதுக்கபட்டு இன்று வரை உங்கள் தெரு மக்கள் எதிர்ப்பால் நிறைவேற்ற முடியாமல் கிடப்பில் இருப்பது உங்களுக்கு தெரியும்..
பல முறை முயற்சிகள் எடுக்கப்பட்ட போதும், அது உங்கள் ஜாமாத் ஒத்துழைப்பு இல்லாமல் தடுக்கபட்டு வருகிறது!! பல வருடங்களுக்கு முன் சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட போது உங்கள் தெரு மக்களால் எதிர்க்கபட்டு தடுத்து நிறுத்தப்பட்டதும் உங்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை!!
இறுதியாக முன்னாள் நகரமன்ற தலைவர் முன்னிலையில் நடந்த கூட்டத்திலும் நீங்கள் கலந்தலோசிக்கபட்டு உங்கள் ஒத்துழைப்பின்மையால் அது நிறைவேற்ற முடியவில்லை என்றெல்லாம் நன்று தெரிந்தும் சம்பந்தப்பட்டவர்களை கலந்தலோசிக்கவில்லை என்று சொல்லுவது எப்படி நியாயம்?
ஏற்கனவே கிடப்பில் உள்ள ஒரு திட்டத்தை ஆய்வு செய்யவும் கோட்டாச்சியர் உங்கள் அனைவரிடமும் அனுமதி வாங்கி தான் செய்யணுமா? மறைமுகமா என்ன நடக்கிறது? ஆண்டாண்டுகாலமாய் அலைகழிக்கபட்டுகொண்டிற்கும் ஒரு திட்டம் தானே இது இதில் என்ன மர்மம் இருக்கிறது?
இந்த திட்டம் உங்கள் தெருவின் வழியே செயல்படுத்தபடுவதால் என்ன தீமைகள் வர போகிறது என்பதை அறிவுபூர்வமாக சுயநலம் மறந்து தெருவின் பந்தல்போட முடியாது, பிள்ளைகள் விளையாட முடியாது, மின்கம்பங்கள் இருக்கிறது, ஆடுமாடு உலவ இயலாது போன்ற அற்ப காரணம் தவிர்த்து ஆக்க பூர்வ காரணம் ஏதும் இருந்தால் கொஞ்சம் சொல்லுங்கள்...உங்கள் சகோதர ஜமாத்தான நாங்களும் உங்களோடு தோளோடு தோள் நின்று எதிர்க்கிறோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross