செய்தி: மறைந்த ஹாஜி பி.மஹ்மூத் உடல் குருவித்துறைப்பள்ளியில் நல்லடக்கம்! நகரப் பிரமுகர்கள் உட்பட திரளான பொதுமக்கள் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அல்லாஹ் நற்பதவியளிப்பானாக... posted byS.K.Salih (Kayalpatnam)[17 December 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 14697
மறைந்த பெருந்தகை, பி.மஹ்மூத் ஹாஜி அப்பா அவர்கள் நகர்நலனில் தன் துவக்க காலத்திலிருந்தே நிறைவான அக்கறை கொண்டவராவார்கள்.
தனக்கு சரியெனப்பட்டதையும், தவறெனப்பட்டதையும், மாற்றுக்கருத்துடையவர்கள் வருந்துவார்கள் என்றிருந்தாலும், அவர்கள் மனம் வேதனையடையாவண்ணம் அதை துணிவுடனும், அதே நேரத்தில் நளினமாகவும் தெரிவிப்பதில் தனித்திறன் படைத்தவர்கள்...
அனைவரின் பார்வையிலும் அவர்கள் பெரிய மனிதர்... ஆனால் அவர்களுடன் நெருங்கிப் பழகியோருக்கு பெரும்பாலான நேரங்களில் அவர்கள் (வயது வேறுபாடு பாராத) உற்ற நண்பர். இதை ஏதோ புகழ்வதற்காக சொல்லவில்லை... அவர்களுடன் பழகிப்பார்த்த அனுபவத்தை வைத்துச் சொல்கிறேன்...
நகரின் பொதுநலப் பணிகளில் மிகுந்த அக்கறை கொண்டிருந்த ஆரம்ப காலப் பெரியவர்களில் இவர்களும் ஒருவர் என்ற அடிப்படையில், அவர்களின் மருமகனார் ஹாஜி தைக்கா ரஹ்மத்துல்லாஹ், பேரன் ஹாஜி தைக்கா உபைதுல்லாஹ் காக்கா ஆகியோர் என்னைப் போன்றவர்களிடம், “வீடியோ கேமராவைக் கொண்டு வந்து, அப்பாவிடம் புதைந்துகிடக்கும் சரித்திரங்களை பதிவுசெய்து கொள்ளுங்கள்...” என்று தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்கள்...
என்னிடம் அதற்கான போதிய கருவிகள் கைவசமில்லா நிலையில் நான் தயங்கிய நேரத்தில், காயல்பட்டினம் குறித்து ஆவணப்படம் ஒன்றை தயாரிப்பதற்காக சன் டிவி ஷாஹுல் ஹமீத் தலைமையில் அசைபட பதிவுக்குழுவினரை அழைத்து வந்திருந்த அன்புச் சகோதரர் கே.எம்.முஹம்மத் தம்பி அவர்கள், கடந்த 31.05.2011 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் வரை, அப்பாவை ஆற அமர நேர்காணல் செய்து சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலான அவர்களின் உரையாடலை பதிவு செய்துள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
அவ்வாறு அமரவைத்து நேர்காணல் செய்யப்பட்டபோது பதிவு செய்த படமே, இச்செய்தியில் வெட்டி வெளியிடப்பட்டுள்ளது.
வல்ல அல்லாஹ், அவர்கள் அறிந்தும் - அறியாமலும் செய்த பாவங்களை மன்னித்து, மண்ணறை - மறுமை வாழ்வுகளை சிறந்த ஒளிமயமான வாழ்வாக்கியருள்வானாக, ஆமீன்.
(கருத்து எண் 14501இல் (இச்செய்தியின் 02ஆவது கருத்துப் பதிவில்) கருத்து தெரிவித்துள்ள சகோதரர் அவர்கள், எனது இக்கருத்தையும், செய்தியின் வாசகங்களையும் பிரித்தறிந்தால், அவரது மனக்குறை நீங்கலாம்...)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross