சிறு குழந்தைகள்தானே! posted byN.S.E. மஹ்மூது (Yanbu, Saudi Arabia)[07 December 2010] IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1470
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
மாணவ மணிகள் மாநில அளவில் சாதனை படைத்திருப்பது நமது பள்ளிக்கு பெருமைதான்.
அதிலே எனக்கும் பெருமைதான்.
மாணவர்கள் விளையாட்டுத் துறையில் முன்னேறுவது மிகவும் வரவேற்கத்தக்கது.
இருந்தாலும் பெண் குழந்தைகள் பள்ளிக்கூட வளாகத்துக்குள்ளேதான் விளையாட்டை வைத்துக்கொள்ள வேண்டுமேத் தவிர
வெளியில் போய் விளையாடுவதோ! போட்டிகளில் கலந்துக் கொள்வதோ வரவேற்கத் தக்கதல்ல.
அதிலும் "யோகா" போன்ற உடற்பயிற்சி, விளையாட்டுகள் தேவைதான் ஆனால் வெளியில் போய் விளையாடவோ, போட்டிகளில்
கலந்துக்கொள்ளவோ பெண் குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது.
தயவுசெய்து சிறு குழந்தைகள்தானே! என்று சொல்ல வேண்டாம்.
இன்று எட்டு, ஒன்பது வயது குழந்தைகளும் வயதுக்கு வருகிறார்கள்தானே.
இதில் பெற்றோர்களும், பள்ளிக்கூட நிர்வாகமும் கண்டிப்புடன் இருக்க வேண்டும்.
சொல்வது என்னுடையக் கடமை சொல்லிவிட்டேன்.
வல்ல அல்லாஹ் நம் மக்களை நேரான பாதையில் சென்றிட உதவிடுவானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross