செய்தி: குருவித்துறைப்பள்ளி, புகாரிஷ் ஷரீஃப், அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிகல்லூரி தலைவர் ஷெய்கு அப்துல்லாஹ் ஆலிம் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஆலிம் பெருந்தகையின் மறைவு நம் நகரின் பேரிழப்பு! posted byK.V.A.T.HABIB MOHAMED (QATAR)[17 December 2011] IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 14725
நம் நகரில் ஒரு காலத்தில் வீணான பொழுது போக்கு, பாட்டுக்கள் என்று இருந்த சமயத்தில் அரபுக்கவி மூலம் அழகான மர்ளியாக்களையும்,பைத்துக்களையும் இயற்றி தந்து வலிமார்களின் கந்தூரி வைபவங்களை அவர்களின் மர்லியா ஓதுவதன் மூலம் இறைநேசர்களின் வாழ்வை நினைவு கூர்ந்து இறைவனின் உகந்த மஜ்லிசாக மாற்றி அதன் மூலம் வீண் பொழுது போக்கை மறக்கடித்ததோடு மட்டும் அல்லாது , கல்யாணம் ,சுன்னத் போன்ற வைபவத்தின் போது , பைத்து சபை யினருக்கு அரபு பைத்துக்கள் அதிகம் அதிகம் இயற்றிக்கொடுத்து அந்த அரபு பைத்துகள் மூலம் ஆட்டம் பாட்டம் மியூசிக் கொட்டு குழல் போன்றவற்றை அடியோடு ஒழித்து காட்டியதில் அதிக பங்கு , இந்த மர்ஹூம் அவர்களுக்கும் , அவர்களின் அருமை சகோதரர் மறைந்த மர்ஹூம் முத்துச்சுடர் ஜுமானி ஆலிம் அவர்களுக்கும் உண்டு என்பதை இந்த தருணத்தில் நினைவு கூறுகிறேன்.
அல்லாஹ்வின் நாட்டப்படி மண்ணுலக வாழ்வை துறந்து மறு உலக வாழ்வை அடைந்த , மறைந்தும் மக்கள் மனதில் நிறைந்து வாழும் மர்ஹூம் அவர்களை பிரிந்து தவிக்கும் உற்றார் உறவினரின் இதயங்களை வல்ல ரஹ்மான் அழகிய பொறுமையை கொண்டும் ஆறுதல் அடைய செய்வானாகவும் ...
மர்ஹூம் அவர்களின் நல்ல அமல்களை வல்ல ரஹ்மான் பொருந்தி(கபூல் செய்து) , மறுமையில் நபிகளாரின் சபா அத்துடன் மேலான சுவன பதியாம் ஜன்னத்துல் பிர்தவ்சில் நுழையச் செய்வானாகவும் , ஆமீன் !
மர்ஹூம் அவர்களின் வேதனையில் நாங்களும் பங்கு கொள்வதோடு , குடும்பத்தார் அனைவருக்கும் எங்களின் அன்பு கனிந்த சலாத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் (அஸ்ஸலாமு அலைக்கும்) .
அன்புடன் ,
K.V.A.T. குடும்பத்தினர்
குறுக்குத்தெரு
காயல் பட்டணம்
மற்றும்
கத்தார்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross