இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.
அல்லாஹ் மவ்த்தா அவர்களின் பிழைகளை பொறுத்து மன்னித்து ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்னும் மேலான சுவன பதியை தந்தருள்வானாக
63:11 وَلَن يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا ۚ وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ
ஆனால், அல்லாஹ், எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்த மாட்டான் - நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் தெரிந்தே
இருக்கிறான்2-156,,,
. الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
2:156.
(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள். ُ 4:78 أَيْنَمَا تَكُونُوا يُدْرِككُّمُ الْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِي بُرُوجٍ مُّشَيَّدَةٍ “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!4-78
20:55 مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ
20:55. இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.
. அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் ஸப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை தந்தருள் புரிவானாக. ஆமீன்.
பொதுவாக நமதூர் சகோதரர்களுக்கு அறிவிப்பது என்ன வெனில் மவ்த்து உறுதியானபின் உடன் செய்திகளை பொது இடங்களிலோ லவ்ட் ஸ்பீக்கர் மூலமோ அல்லாமலோ அறிக்விக்கும்போது, அறிவிப்பின் கடைசியாக “ அல்லாஹும்மங்ஃபிற் லஹூ, வற் ஹம் ஹூ” என்று ஆண் மவ்த்தாக்கும்.பெண் மவ்த்தாவாக இருந்தால் ”அல்லாஹும்மங்ஃபிற் லஹா” ”வ ற் ஹம் ஹா “ என்றும் துஆ செய்து முடித்தால் ஒரு மையித்துக்கு நாம் கேட்கும் துஆ வும் சேரும்.. மற்றவர்களை துஆ கேட்க வைத்த ஃதவாபும் நமக்கும் கிடைக்கும். இது ஒரு நீண்ட ஸுன்னத்தான துஆ வின் கடைசி வாசகங்கள் . மவ்த்து உறுதியானபின் மையித்தை பார்த்த உடன் இந்த துஆக் களையாவது ஓத வேண்டும்.
للهم اعفر له وارحمه واجعل قبره روضة من رياض الجنة
அம்ர் 100. 'நிச்சயமாக அல்லாஹ் கல்வியை(த் தன்னுடைய) அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்து விட மாட்டான். ஆயினும் அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக ஓர் அறிஞர் கூட மீதமில்லாமல் ஆக்கிவிட்டதும் மக்கள் அறிவீனர்களைத் தம் தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பும் வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழி கெட்டு(ப் பிறரையும்) வழி கெடுப்பார்கள்' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு இப்னி ஆஸ்(ரலி)- நூல்-புகாரி அறிவித்தார்.
Volume :1 Book :3
ஆம், ஆம், உண்மையிலும் உண்மையே !!!
”ஆலிமுல் மவ்த் ஆலமுல் மவ்த்”ஒரு ஆலிம் மவ்த் ஆகுவது முழு உலகமுமே மரணிப்பதுக்கு சமம் என பொறுள்பட நாயகம்(ஸல்) கூறினார்கள். முற்றிலும் சரியே!
காறணம் 25 வருடங்களாகவே காயலில் கல்விச் சமுத்திரங்களான சங்கைக்குரிய அல்லாமாக்களான மற்ஹூம்களான மு.க.செய்யிது இப்றாஹீம் ,சா.சாஹுல் ஹமீத், மி.அபுல்ஹஸன், எஸ்.எம்.ஐதுறூஸ் சாஹிபு தம்பி போன்ற ஆலிம்கள் மறைந்தனர்.
இதை ஒரு குறிப்பெடுத்து வைத்துக் கொண்டு அடுத்த மக்களிடமும் கூறுங்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross