Re:“வேணும்னா உங்களுக்கும் போ... posted byசாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்)[18 December 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14782
- இந்த தூத்துக்குடி கம்பனி என்ன போலோ...ஆம்.. ரம்போலா என்பவர் யாருடைய பினாமி...
- தார் சாலைக்கு பதிலாக சிமெண்ட் சாலையில் அதிக வருமானம்..
- ஊர் பூரா எங்கள் ஆட்சியில் சிமெண்ட் சாலை அமைத்தோம் என்று மேடையில் மார்தட்டினார்களே....
** அவர்களாகவே திட்டம் போடுவார்கள்,
** எதில் அதிக வருமானமோ அதை தான் திட்டமாக கொண்டுவருவார்கள்,
** அனைத்து ஒப்பந்தமும் அவர்களே எடுத்துக்கொள்வார்கள்... கூடிக் கழித்து பார்த்தால் கணக்கு சரியாக வரும்.
சரி, இந்த மேட்டர் புதியதாக இருக்கின்றதே... 50 , 100 கொடுத்தால் இந்த சலுகை கிடைக்கிறதோ...
நம் மக்களும் இருக்கின்றார்களே.
எங்கள் தெருவில் ரோட்டை நோண்டி, முதலில் செம்மண் கொண்டு வந்து கொட்டினார்கள்.
ஒரு அம்மணி வீட்டுக்கு முடுக்குக்கு அருகில் ஒரு பெரிய செம்மண் கல் வந்து விழுந்தது.
உடனே அம்மணி.. " அடேய்..வாப்பா.. இந்த கல்லை வேறு இடத்தில் தூக்கிப்போடு, வேறு இடத்தில் தூக்கிப்போடு " (மற்றவர்களுக்கு இடைஞ்சல் என்றால் பரவா இல்லையாம்), என்று அவரின் உயிரை வாங்கி விட்டார்கள்.
அவரோ " அம்மா.. இந்த கல் எல்லாம் ரோட்டிற்கு உள்ளே சென்று விடும், அதன் மேலே சிமெண்ட் ரோடு போட்டு விடுவோம்" என்று கூறியும், அம்மணி சமாதானம் அடையாமல், பொறுமை இல்லாமல் 25 ரூபாய் அவருக்கு கொடுத்து அதை நகற்றி போட வைத்தார்கள். அன்று மாலையே அந்த கற்கள் எல்லாம் சமப்படுத்தப்பட்டு விட்டது. இதான் நம் ஊர்.
ஊரில் எங்கு தவறு நடந்தாலும் கழுகு கண் கொண்டு கவனிக்கும், சமூகஅக்கறை உள்ள சகோ. S.K. ஸாலிஹ் அவர்களின் வீட்டிற்க்கு அருகிலா இப்படி செய்தார்கள்..ஒரு நாளைக்கு பல தடவை அந்த இடத்தை கிராஸ் பண்ணி இருப்பாரே....கொடுமையப்பா...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross