Re:புதிய மெயின் ரோடு உருவாக்குதல் posted byV D SADAK THAMBY (Guangzhou ,China)[18 December 2011] IP: 113.*.*.* China | Comment Reference Number: 14787
நான் முன்பொருமுறை பதிந்த கருந்தின்படி ,காயல்பட்டினம் ஓடக்கரையிலிருந்து பூந்தோட்டம் - தைக்காபுரம் வழியாக துளிர் பள்ளி வளாகத்தில் இணையும் சாலையை புதிய போக்குவரத்திற்கு பரிசீலனை செய்யலாம் .
தற்போது இருக்கும் இந்த குறுகிய சாலையையே நாம் எதிர்நோக்காமல் , அதை புதிய அகலமான (50 வருட ) எதிர்கால தேவைக்கு உபயோகமான சாலையாக அமைக்கப்பட வேண்டும்.
இது ஒருவழிப்பாதையாக இல்லாமல் நால்வழிப்பாதையாக மற்றும் குறுகிய வளைவு எதுவுமில்லாதவாறு அமையவேண்டும்.இதற்க்கு தேவையான நிலங்களை அரசு கையகப்படுத்த வேண்டும்.அவ்வாறு நிலம் கையகபடுத்தும்போது நாம் (நில உரிமையாளர்கள் ) எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்க வேண்டும்.
அவ்வாறு அமையும் சாலை எதிர்காலத்தில் புதிய மெயின் ரோடாக அமையும்.
திருச்செந்தூர் செல்லும் வாகனங்களும் தூத்துக்குடி செல்லும் வாகனங்களும் , இந்த புதிய சாலையில் செல்லும்படியாக , இந்த சாலை அமையப்பட வேண்டும்.
இதன் மூலம் நம் நகர் விரிவடையும்.புதிய சாலையின் அருகாமையில் உள்ள நிலங்கள் ஏற்றம் பெரும்.
தற்போதைய மெயின் ரோட்டையும் தொடர்ந்து இருவழி போக்குவரத்திற்கு உபயோகிக்கலாம் . பெரிய நெசவுதெரு வாசிகளுக்கும் இதன்மூலம் இடையூறு ஏற்படாது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross