சாலை கட்டமைப்பு மேம்படவேண்டுமேன்றால்...! posted byஎல் ஏ கே புஹாரி (Hong Kong)[18 December 2011] IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 14841
நம் நகருக்குள் சாலை கட்டுமான (ROAD CONSTRUCTION PROJECTS)பணிகளை, கூடுமானவரை நம் நகரை சேர்ந்த (சாலை)கட்டுமான நிறுவங்களோ, தன்னார்வ அமைப்புகளோ அல்லது அதனை சார்ந்த பிரதிநிதிகளோ, அல்லது உலக காயல் நலமன்றங்களின் ஆதரவு பின்னணியில் உள்ளூர் பிரதிநிதிகளோ டெண்டர் எடுக்கும் தகுதி பெற்று, நம் நகராட்சி உறுப்பினர்கள் & அதிகாரிகளின் முழு மேற்பார்வையில்,நமது நகரின் முன்னணி பொறியாளர்களின் ஆலோசனைகள் மற்றும் அந்தந்த பகுதி மக்களின் ஆலோசனைகளை கவனத்திற் கொண்டும் அதை தரமான, உத்திரவாதமான சாலைகளை ஏற்படுத்தலாம்.
அப்போது தான்,ஒரு முறை போடுகின்ற சாலைகள் ஸ்திரத்தன்மையுடன் நீண்ட காலங்களுக்கு தாக்குபிடிக்கிற வகையில் அது அமையும்.அப்படியே நகரின் அணைத்து பகுதிகளிலும் படிப்படியாக சாலை வசதி கட்டமைப்பை சீராக்க முடியும்.
நம் நகரின் மீது அக்கறையற்ற வெளியூர் பினாமிகள்,லாபம் ஒன்றே குறிக்கோளுடன் வணிக நோக்கத்துடன் டெண்டர் எடுக்கும் நிறுவனங்கள் அரசியல்வாதிகள் & அதிகாரிகளின் பினாமிகள் ஆகியோர்கள் மூலம் நடைபெறும் சாலை உருவாகமோ, செப்பனிடும் பணிகளோ ..தரமற்றதாகவும்..மிக குறுகிய கால இடைவெளியில் திரும்ப திரும்ப அதே சாலையை தோண்டும் நிலை வந்து கொண்டிருக்கும்.தோண்டி தோண்டி மக்களின் வரி பணவிரயம் தவிர வேறோன்றுமிருக்கபோவது இல்லை..அது தானே டெண்டர் எடுக்கும் ஒப்பந்தக்காரர்/நிறுவனங்களுக்கு சாதகம்..!!
நமது நகரின் INFRASTRUCTURE க்கு என்று பிரத்தியேகமாக ஒரு அமைப்பு வுருவாக்கப்படவேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross