Re:காயல்பட்டினம் நல அறக்கட்ட... posted byMohmed Younus (trivandram)[20 December 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 14909
உலகில் உள்ள பாதி மக்களை ஏதோ ஒருவகையில் மன நோய் பாதித்து உள்ளது. உடம்பில் ஏற்படும் 90% சதவீதமான நோய்கள் மனதில் இருந்து தான் தோன்றுகின்றது.
இன்றைய போட்டி நிறைந்த சூழ்நிலையில் நடுத்தர வயதினர் இந்த நோயினால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மன நல சம்பந்தமான மாத்திரைகளை அதிகமான அளவில் உடகொள்ளுவதில் 35% நடுத்தர வயதினர் என்று ஒரு ஆய்வு சொல்லுகின்றது.
அடுத்தவனை விட அதிக அளவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஏற்படும் மன சஞ்சலத்தினால் கூட இதய பாதிப்பு ஏற்படுவதாக பிரபல இதய நிபுணர் சொக்கலிங்கம் அவர்கள் எழுதிய கட்டுரையில் படித்து இருக்கின்றேன். இப்போதெல்லாம், எந்த நோய் என்று மருத்தவரிடம் சென்றாலும், அவர்களில் முதலில் சோதிப்பது மனதைத்தான். ஏன் என்றால் மனதை தவிர எல்லாவற்றயுக்கும் அவரிடம் மருத்துவரிடம் மருந்து உண்டு.
இந்த நிலையில், இத்தகைய மருத்துவ முகாம் நடத்துவது மிகவும் சாலச்சிறந்தது. அல்லாஹ் உங்களுக்கு எல்லா வித வகையிலும் உதவி புரிவானாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross