Re:ஒருவழிப்பாதை வழித்தடங்கள்... posted byALS maama (Kayalpatnam)[22 December 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 14981
அஸ்ஸலாமு அலைக்கும்,
காலத்தின் கட்டாயம் ஒருவழி பாதை அவசியமாகும். இரு வழிப்பாதையில் தற்போது வாகனங்கள் செல்லும்போது மெயின் ரோட்டில் குறிப்பாக தபால் நிலையம் அருகில் மிகவும் நெருக்கடியாகிவிடுகிறது. இதனால் நமதூருக்கு வரும் தொலைதூரப் பேருந்துகள் இப்பகுதியை கடந்து செல்வதற்கு கால தாமதம் ஆகிவிடுகிறது.ஆகவே அந்த பேருந்துகள் வேறுவழியாக சென்றுவிடுகிறது.
இரவில் நமதூர் வழியாக திருச்செந்தூர் செல்லும் பேருந்துகள் பல காலமாக வேற்றுப்பாதை வழியாக இக்காரனமாகவே செல்கின்றன .ஒரு வழிப்பாதையாக மாற்றினால் திருச்செந்தூர் வழியாக நமதூருக்கு வரும் வாகனங்கள் காயிதே மில்லத் நகரை கடந்து தாயிம்பள்ளி வழியாக பெரிய நெசவு தெரு சாலையில் சென்றால் நெருக்கடியை குறைக்க முடியும்.
இதை பெரிய நெசவு தெருவை சார்ந்த பெரியார்கள் கூடி ஆலோசித்து நல்ல முடிவை எடுத்தால் ஊர் மக்களுக்கு மிகப்பெரிய உதவி புரிந்தார் போல் இருக்கும் , அது காலத்தால் மறக்கப்படவும் மாட்டாது. இதனால் நமதூருக்கு வரும் தொலைதூரப் பேருந்துகள் இப்பகுதியை எந்த நேரமும் கடந்து செல்வதற்கு வாகன ஓட்டிகள் பிரியத்தோடு வருவார்கள் .
( இதை விட்டுவிட்டு, முடிவில்லாத கூடங்குளம்,முல்லை பெரியார் போன்ற பிரச்சனை போலவும்) நாட்களை கடத்திக்கொண்டே இருக்க வேண்டாம். மக்களின் நலன் கருதி நல்லதொரு முடிவை பெரிய நெசவு தெரு ஜமாஅத்தார்கள் எடுக்க அன்புடன் வேண்டுகிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross