செய்தி: நூலகத்தை மேம்படுத்த அதிகளவில் புரவலர்களைச் சேர்க்க வேண்டும்! காயல்பட்டினம் அரசு நூலக வாசகர் வட்ட கூட்டத்தில் முடிவு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நூலகத்தை மேம்படுத்த அதிகள... posted byசாளை பஷீர் (சதுக்கைத்தெரு, காயல்பட்டினம்)[25 December 2011] IP: 180.*.*.* India | Comment Reference Number: 15026
தொலைக்காட்சி இல்லாத நாட்களில் என் கற்பனை வெளிகளுக்கு தங்குதடையில்லாத தீனி போட்ட நமதூர் அரசு நூலகத்தை மறக்கவே இயலாது.
அன்றைய நூலகர் பரமசிவம், உதவியாளர் சங்கரன் ஆகியோர் மிக நல்ல சுபாவமுடையவர்கள். நாங்கள் அடித்த லூட்டிகளை (அடுக்கில் உள்ள நல்ல கதை நூல்களை எக்கில் சொருகிய கள்ளத்தனம் உட்பட) மிகவும் பொறுமையாக சகித்தவர்கள்.
அன்று நமது பிரதான வீதியில் முதல் தளத்தில் சிதிலமான கட்டிடத்தில் இயங்கி வந்த நூலகத்தில் நூலகம் திறக்கும் நேரத்திற்காகவே காத்துக் கிடந்ததுண்டு.
கோகுலம், ரத்தினபாலா, அம்புலிமாமா போன்ற குழந்தைகள் சஞ்சிகைகளும், அன்றைய சோவியத் ஒன்றியத்திலிருந்து வெளிவந்த குழந்தை, சிறுவர் இலக்கியங்களும், டார்ஜான், இரும்புக்கை மாயாவி, மந்திரவாதி மாண்ட்ரேக், சிலந்தி மனிதன், சங்கர்லால் போன்ற கனவுலக கதாநாயகர்களும், அவர்களின் மனங்கொள்ளும் சாகசங்களூம் தமிழ்வாணன், ராஜேஷ் குமார் ஆகியோரின் குற்றப்புலனாய்வு நவீனங்களும் மிக அற்புதமானவை. அவைகள் படைக்கும் மாய உலகில் முங்கி குளித்ததுண்டு. பால்ய பருவத்து துயரங்களை மறக்க உதவிய மருந்துகுளிககைகள் அவை.
இன்று எனது எழுத்துகளுக்கான அரிச்சுவடியை நான் கற்ற இடம் நமதூர் அரசு நூலகம்தான். நான் அதற்கு மிகுந்த நன்றிக்கடன் பட்டிருக்கின்றேன்.
பாவலர் பூங்காவிற்கு அது இடமாற்றம் செய்யப்பட்ட பிறகு ஒரே ஒரு தடவைதான் செல்ல முடிந்தது. மிக வருத்தமாகவே உள்ளது.
தொலைக்காட்சி, இணையதள ஆக்கிரமிப்பிற்குப்பிறகும் நமதூர் நூலகம் வாழ உறுதுணையாக நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும் !!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross