Re:ஹாங்காங் பேரவையின் மூத்த ... posted byNUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh -KSA)[25 December 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15072
நல்ல பண்பாளர் ஹாஜி மூஸா நெய்னா அவர்கள் திடீர் வபாத் மிகுந்த அதிர்ச்சி தந்தது.
சில மாதங்களுக்கு முன் என்னை தம்பி பாவலர் அப்பாவின் பேரன்தானே. நமதூர் பேரூராட்சி தேர்தலில் போட்டியிட்டு உங்கள் அப்பா, வாப்பா மாதிரி சமூக சேவை செய்ய வேண்டியதுதானே நீ. உங்களின் பணி ரியாத் சவுதியோடு மற்றும் நின்று விடகூடாது. சிறப்பான பணியை உங்கள் காயல் நற்பணி மன்றம் ரியாத் செய்து வருகிறது. இந்த மாதிரி நமதூர் மக்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அவர்கள் எல்லோரும் மன்றம் அமைத்து பாடு பட வேண்டும். நானும் உன் மாமா மர்ஹூம் பாவலர் யூசுப் போன்றவர்கள் நிறைய பணிகளை விளம்பரம் இல்லாமல் செய்து இருக்கிறோம். நீயும் அது போல சேவை செய்வது மிக்க மகிழ்ச்சி. ஊர் வரும் போதெல்லாம் ஐக்கிய பேரவை சென்று உன்னால் இயன்ற பணிகளை ஒருங்கிணைத்து செயல் பட வேண்டும். உங்கள் வாப்பா மர்ஹூம் ஈஸா லெப்பை அவர்கள், உங்கள் பாட்டனார் மர்ஹூம் பாவலர் அப்பா , உங்கள் மாமா மர்ஹூம் பாவலர் யூசுப் அவர்களை போன்று சமூக பணிகளை செய்ய வேண்டும், என்று பல்வேறு ஆலோசனை வழங்கியதை எண்ணி நினைவுருகிரேன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழை தனை பொறுத்து மண்ணறையை பிரகாசமாக்கி வைத்து மறுமையில் மேலான சுவனம் நுழைய அருள் புரிவானாக ஆமீன் . அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர் யாவருக்கும் பொறுமையை கொடுப்பானாக . ஆமீன்
M .E .L .நுஸ்கி
மற்றும் ரியாத் வாழ் காயல் மக்கள்
ரியாத்
சவுதி அரேபியா
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross