எங்களுக்கு அன்பை ஊட்டி வளர்த்த பாசமிகு
எங்கள் தாய்வழி பூட்டி கம்மாவின் உடன் பிறந்த சகோதரர்
மரியாதை மிகுந்த ஹாஜி முஹம்மத் லெப்பை கான் அவர்களின் அருந்தவ புதல்வர் அன்பே உருவான எங்கள் இதயங்களில் என்றும் நிறைந்தவருமாகிய மரியாதைக்குரிய
அப்பா ஹாஜி எம்.எல்.மூஸா நெய்னா
அவர்கள் 25.12.2011 அன்று மரணமடைந்த செய்தியறிந்து மிகவும் கவலையடைந்தோம். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
இறைவனுடைய நாட்டப்படி ஏற்பட்டுவிட்ட இந்த மரணத்திற்காக நாங்கள் ஸபூர் செய்து கொண்டோம்..
மர்ஹூம் அவர்களைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரின் மகன்களான என் பாசமிகு இளவல்கள் முனைவர் ஹாஜி எம்.என்.முஹம்மத் லெப்பை,
ஹாஜி எம்.என்.அப்துல் மாலிக்,
ஹாஃபிழ் எம்.என்.முஹ்யித்தீன் இப்றாஹீம் ஸாஹிப்,
மருமகன் ஹாஜி ருக்னுத்தீன் ஸாஹிப்
மனைவி ஹாஜ்ஜா ஆர்.எஸ்.முஹம்மத் ஆயிஷா மாமி, மகள்கள் ,மருமக்கள்கள் மற்றும் குடும்பத்தார்கள் அனைவர்க்கும் இவ்வளவு பெரிய இழப்பைத் தாங்கும் இதயத்தையும், அழகிய பொறுமையையும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் வழங்க இறைவனிடம் நெஞ்சுருக பிரார்த்திக்கிறோம். ஆமீன் ...
யா அல்லாஹ் எங்கள் அருமை அப்பாவின் நற்காரியங்களை ஏற்று கொண்டு அவர்கள் பாவ பிழைகளை மன்னித்து அவர்கள் கபுரை வெளிச்சமாகவும், விசாலமானதாகவும் ஆக்கி
கிருபை செய்வாயாக ஆமீன்...
வல்ல அல்லாஹ், கருணையே உருவான எங்கள்
அன்பு அப்பாவின் மண்ணறை, மறுமை வாழ்வுகளை ஒளிமயமாக்கி வைத்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தை நிறைவான நற்கூலியாக வழங்கியருள்வானாக, ஆமீன்.
அன்பான வேண்டுகோள்...............
அவர்கள் வாழ்வின் இறுதிவரை தனது இடது கைக்கு கூட தெரியாதவண்ணம் வலது கை மூலம் தேவை உடைய குடும்பத்தார்கள், அக்கம் பக்கத்தார்கள் அறிந்து
வாரி வாரி வழங்கி வந்த பிரகாரம் மக்களாகிய நீங்களும்
அவர்கள் விட்டு சென்றுள்ள இந்த கொடை பணியை தொடர்ந்து தொய்வின்றி செய்து வருமாறும் இந்த நற்பணியை உங்களது தந்தை அவர்களது தாய், தந்தைகள் செய்த சேவையின் தொடர்ச்சியே என்பதை மனதில் நிறுத்தி நீங்களும் தொடருமாறும் உரிமையுடன் உள்ளன்புடன் உங்களில் ஒருவன் என்றவர்களாக
மிகுந்த பணிவுடன் வேண்டுகின்றோம்....
அட்மின் அவர்களுக்கு அன்பு யோசனை...........
இது போன்ற செய்திகளை எங்களுக்கு அறிய தருவது போல்
இவர்களில் உரியவகளை தொடர்பு கொண்டு பேசும் வண்ணம்
அவர்களது தொலைபேசி,அலைபேசி எண்களை அறிய தந்தால்
பேர்உதவியாக இருக்கும் ...........
ஆழ்ந்த அனுதாபங்களுடன் அன்பான ஸலாமுடன்
எங்கள் அன்பு தாய், தந்தை, மனைவி குடும்பத்தார்கள் மற்றும்
ரஹமத்துன்-லில் -ஆலமீன் மீலாது பேரியம் சார்பாக
சட்னி.செய்யது மீரான் ...
சட்னி .முஹம்மது உமர் ஒலி...
ஜித்தா,சவுதி அரேபியா...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross