செய்தி: முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர், தமுமுக துணைப் பொதுச்செயலாளர் சந்திப்பு! சமுதாய நலன் குறித்து கருத்துப் பரிமாற்றம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:முஸ்லிம் லீக் பொதுச் செயல... posted byMohmed Younus (trivandram)[28 December 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 15189
மிக அழகான தொடக்கம். செயல்பாடு ரீதியாகத்தான் இரு அமைப்புகளுக்கும் கருத்து வேறுபாடு உண்டு. சமுதாய சேவை செய்ய வேண்டும் என்பதில் இரு அமைப்பின் தலைவர்களும் மிகவும் பாராட்டுக்கு உரியவர்கள். எந்தவித குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளாதவர்கள்.
முஸ்லிம் லீகின் பொது செயலராக பொறுப்பேற்று உள்ள சகோதரர் அபுபக்கர் மறைந்த சிராஜுல் மில்லத் பாசறையில் வளர்ந்தவர். அங்கு கற்ற கண்ணியத்தை செல்லும் இடங்கள் எல்லாம் பேணுவதாக அறிகிறோம். எல்லா அமைப்புகள் இடத்திலும் கண்ணியத்தையும் சகோதர உணர்வை பேணுவதாகவும் கேள்விபடுகின்றோம்.
24 சட்ட மன்ற உறுப்பினர்களை கொண்ட கேரளா மாநில முஸ்லிம் லீக், தொழில் துறை, கல்வித்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சி துறை போன்ற முக்கியமான அமைச்சகங்களை தன வசம் கொண்டதோடு மட்டும் அல்லாமல் அணைத்து துறைகளிலும் சமுதாயத்திற்கு தனது பணிகளை திறம்பட செய்து வருகின்றது.
சமீபத்தில் கேரளா மாநில பல்கலை கழகங்களுக்கு நியமிக்கப்பட்ட துணை வேந்தர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் முஸ்லிம்கள் ஆகும். இது முஸ்லிம் லீகின் மெச்ச தக்க சாதனை ஆகும். இதனை கேரளா மாநில மற்ற கட்சிகள் கூட "கல்வியில் இஸ்லாமிய மயம்" என்று கூவியது, லீகின் சமுதாய பணியின் மாட்சியமைக்கு கட்டியக்கூருவதாக உள்ளது.
ஆனால், தமிழகத்தில் அதன் செயல்பாடுகளில் சமீபத்தில் ஏற்பட்ட செயல்பாடுகள் என் போன்ற முன்னால் லீகர்களை தூர போக செய்தது. பின்னர் அதற்கு ஏற்பட்ட கசப்பான முடிவுகளால், தன் செயல்பாடுகளை வீரியம் கூடி மாற்றம் செய்ய போவதாக அறிகிறோம். அதன் பட்சத்தில், அதன் சமுதாய பணி மென்மேலும் மெருகு ஏற்றுவதாக அமையும். வல்ல அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross