Re:ஒருவழிப்பாதை குறித்து நெச... posted byCnash (KTM Street) (Makkah )[29 December 2011] IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15225
கே.டி.எம் தெரு ஆக்கிரமிப்பை அகற்றவேண்டுமாம்!!!
ஆக்கிரமிப்பு என்று சொல்ல உங்களுக்கு அதிகாரம் தந்தது யார்? அதை சொல்லுவதற்கு தங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதை உங்களின் இந்த பரந்த(!) பெருந்தன்மையான(?) மனப்பான்மையை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
KTM தெரு இதுவரை ஊருக்காக இழந்தது என்ன? செய்த தியாகம் என்னென்ன? என்பதை அறிந்து கொண்டு இது போன்ற தீர்மானத்தை போடுங்கள். அரசாங்கத்தின் அப்பன் வீட்டு சொத்தை ஆக்கிரமித்து நாங்கள் வீடு கட்டிக்கொண்டு இருக்கவில்லை, எங்கள் அப்பன் பாட்டன் சொத்தைதான் அரசுக்கு தாரைவார்த்து இருப்பதை அரசின் ஆவணங்களை பார்த்து தெரிந்து வந்து தீர்மானம் போடுங்கள். இன்னும் இருக்கிற வீட்டையும் இழந்து இடம் தரணுமா? நீங்கள் சொகுசாக போறதுக்கு!! செய்கிற உதவியை பாராட்டும் மனப்பக்குவம் இல்லாவிட்டாலும் களங்கபடுத்தாமல் இருப்பது உங்களுக்கு நல்லது. தம்மை விட்டு விட்டு இவர்கள் வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்?
மற்றவர்களின் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி அடையாதவனால் நற்செயல்களை செய்ய இயலாது. எனவே
இவர்கள் தானாக ஊருக்கு நன்மை செய்வார்கள் என்று இனி நகர் மன்றம் பகல் கனவு காணவேண்டாம் . இன்ஷா அல்லாஹ் இதில் அரசாங்கம் உறுதியான முடிவெடுத்து நடத்திகாட்டினால் மட்டுமே வலிகள் எல்லாம் வளியாய் போய் வழி பிறக்கும் . பொறுப்பானவர்கள் என்று தங்களை காட்டி கொள்ளும் சிலர் தவறான வழிகாட்டி உண்மைக்கும் சத்தியத்திற்கும் உங்களை நீங்களே வெறுப்பானவர்களாக ஆக்கி விடாதீர்கள்.
இவர்கள் பாதை தருவார்கள் என்று இனியும் எதிர்பார்க்க வேண்டாம்; எதிர்பார்த்தால் இறுதிவரை எதையும் சாதிக்காமலே போய் விடுவோம் சட்டத்தின் மூலம் சாதித்து காட்டுங்கள். நாளைய சமுதாயமாவது சந்தோசப்படும்.
சிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை. அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும். அவற்றைக் கடந்து சென்றால்அவை சிறிதாகிவிடும். எனவே இவர்கள் தரும் சிக்கலில் சிக்கி கொண்டிருக்காமல் சீக்கிரமாக செயலாற்றுங்கள்!!
இந்த கூட்டத்தால் நகரமன்ற தலைவருக்கு நேரம் தான் விரயம்!! அவர்கள் அளித்த வரைபடத்தை சட்ட நடைமுறை படுத்த இயலாது, வேண்டும் என்றால் சட்டம் (FRAME ) போட்டு நகர் மன்றத்தில் மாட்டி வையுங்கள்!! அடுத்த தலைமுறை கண்டு ரசிக்கட்டும். இவர்களிடம் இறைஞ்சுவதை விட்டு விட்டு நடக்கின்ற வேலைகளின் கவனம் செலுத்துங்கள்...நல்லதை எதிர்பார்க்கிறோம்!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross