Re:ஒருவழிப்பாதை குறித்து நெச... posted byMohamed Adam Sultan (kayalpatnam)[30 December 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 15248
மரியாதைக்குரிய பெரிய நெசவு தெரு ஜமாதார்களே
ஒருவழி பற்றிய உங்களுடைய தீர்மானத்தில், எங்கள் தெருவழியாக போக்குவரத்து கூடாது ,அதை எதிர்கிறோம் என்று சொல்லி இருக்கிறீர்கள். சரி அது உங்கள் விருப்பம், உங்கள் உரிமை. அதே நேரத்தில் மாற்றுவழியை சொல்ல உங்களுக்கு என்ன உரிமை?.
அந்த மாற்றுவழி தெருவாசிகள் உங்களை சொல்லசொல்லி பட்டயம் எழுதி உரிமை தந்து இருக்கிறார்களா?
அதோடு மட்டும் உங்கள் தீர்மானம் நிற்கவில்லை. KTM தெரு,மெய்ன்பஜார் HAT தெருவிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்றுங்கள் என்று கட்டளை இட்டு இருக்கிறீர்கள்
உங்கள் வாதப்படி ஊரில் இந்த மூன்று தெரு வாசிகள் மட்டும் தான் ஆக்கிரமித்து இருக்கிறார்கள் என்று அடயாளம் காட்டி இருக்கிறீர்கள்.
உங்கள் சிந்தனை {புத்தி) எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. KTM தெருவாசிகலையே குறிவைக்கிரீர்களே அதன் உள் நோக்கம்தான் என்ன?
ஊரின் போக்குவரத்திற்கு உதவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் பல வருடங்களுக்கு முன்னாலேயே தங்கள் வீட்டின் காபவண்டு சுவரை எல்லாம் இடித்து இடம் கொடுத்தது தான் அவர்கள் குற்றமா?
தங்கள் பிள்ளைகளை வெளியில் அனுப்பாமல் வீட்டிலேயே விளையாட பழக வைத்து ஊருக்கு உதவ வேண்டும் என்று நினைத்தது அவர்கள் குற்றமா?
கல்யாண காட்சிகளை தன் வீட்டுமுன் பந்தல்போட்டு பரவசம் அடைய வேண்டும் என்ற ஆசை அனைத்தையும் அடக்கி நம்மூர் மக்களுக்காக தியாகம் செய்வோம் என்ற தியாக உணர்வு குற்றமா?
ஊர் போக்குவரத்திற்கு KTM தெரு ஜமாஅத் மக்கள் மட்டும் உதவினால் போதுமா, அந்த ஜமாஅத் பள்ளியாகிய தாயும்பள்ளிவாசலும் தன் பங்க்கிற்கு செய்யவேண்டுமே என்று.
பெருந்தன்மையுடன் ரோட்டு புரதிலுள்ள தங்கள் சொந்த இடத்தை சுமார் இரண்டாயிரம் சதுரடியை விட்டு கொடுத்து ,ஏற்கனேவே உள்ள சுவரை இடித்து விட்டு உள்ளே இழுத்து புது சுவரை கட்டி இருக்கிறார்கள் கண்யமிகு தாயும் பள்ளி வாசல் ஜமாத்தார்கள்
இச்செயல் அவர்களின் பெருந்தமை கலந்த கண்ணியத்தை காட்டுகிறதா அல்லது அவர்களின் குற்றத்தை காட்டுகிறதா?
ஊருக்கு ஒருவழி பாதை வேண்டும் என்ற கோரிக்கையை தாயும் பள்ளி ஜமாஅத் மனுவாக கொடுத்ததே தவிர
இந்த வழியாகத்தான் வரவேண்டும் என்று எந்த திசையையும் இமியளவும் கண்யகுறைவாக குறிபிட்டு காட்டவில்லை . .
பெரிய நெசவு தெருவாசி பிள்ளைகள் உயிர் தான் விலை மதிக்க முடியாத உயிர், அவர்களை பொன் போன்று போற்றி பாதுகாக்க வேண்டும் என்று ஜமாத்தார்கள் நினைத்தால்,
ஒரு சைக்களை கூட செல்ல அனுமதிக்ககூடாது, ஏனனில் சைக்கிள் மோதி கூட மரணம் சம்பவித்திருக்கிறது
என்னுடைய யோசனை என்னவெனில் பெரிய நெசவு தெரு ஆரம்பிக்கும் பகுதியின் குறுக்கே ஒரு பெரிய சுவரும்,அத் தெரு முடியும் இடத்தில ஒரு பெரிய சுவரும் கட்டி,தெருக்குள்ளே செல்வோர்கென்று மூன்றடி வாசல் மட்டும் அமைத்து தெருவை பாதுகாத்தால்,
தெருவாசிகள் அனைவரும் ஜமாஅத்துனுடைய பாதுகாப்பை பெரிதும் போற்றுவார்கள். இது என்னால் இயன்ற சிறு யோசனைதான்.
சரி, சரி பெரியநெசவு தெருவுக்கு இப்படி செய்துவிட்டோம். சின்ன நெசவு தெருவுக்கு ????
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross