Re:ஒருவழிப்பாதை குறித்து நெச... posted byCnash (Makkah )[31 December 2011] IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15276
அஸ்ஸலாமு அலைக்கும்!
இந்த இணையதள செய்தியும் அதன் கருத்துகளும் உண்மையை எடுத்துசொல்லும் போதெல்லாம் தங்களுக்கு உடன்பட்டதாக இருக்கும் போது வாசமாக விசியது. இன்று உங்களுக்கு பாதாகமாக தெரியும் போது வாந்தியாக மாறி விட்டதோ? இதன்மூலம் சந்தர்ப்பவாதம் சந்திக்கு வருவதற்கு இந்த இணையதளம் காரணம் ஆகிவிட்டது என்ற ஆதங்கமா?
(Moderation பற்றி பேசி இருக்கும் நீங்கள், நியாப்படி பார்த்தால் புதிய கருத்தாளர் என்ற நிலையில் உங்கள் முந்தைய கருத்துக்களை கூட அட்மின் நிராகரித்திருக்க வேண்டும். மறுக்காமல் வெளியிட்டது கூட உங்கள் பக்கம் உள்ள நியாயம் மற்றவர்களுக்கு தெரியட்டும் என்ற நோக்கில்தான் இருக்கும் என்று நினைக்கிறன்.)
யார் சொல்லுவது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம் . இதுவரை ஊர் நன்மைக்காக பாதிக்கப்பட்டோம், படுகிறோம், இனியாவது எங்கள் சுமையை கொஞ்சமாவது குறையுங்கள் என்று நாங்கள் சொல்லுவது உங்களுக்கு ஆணவமாகவும் ஆரோக்கியமற்றதகவும் தெரிகிறதா ?
ஆத்திரம், ஆணவம், ஆரோக்கியம் பற்றி பாடம் நடத்திய சகோ. ஹைதர், அவை எதற்கும் பஞ்சம் இல்லாமல் கருத்தில் கொட்டி தீர்த்திருக்கிறார். முந்தைய கருத்தில் எங்கள் மக்களை கலந்தாலோசிக்கவில்லை, மனித நேயம் மரணித்துவிட்டது என்றெல்லாம் உண்மையை மறைத்து கூறியவர், அன்று நாம் KTM தெருவை கூறவில்லை மாறாக ஆக்கிரமிப்பு அதிகம் உள்ள மெயின் ரோட்டைத்தான் கூறுகிறோம்... என்றெல்லாம் கருத்து சொன்னவர் இன்று நிலைதடுமாறி அவர் ஜமாத்தின் நிலைக்கேற்ப தன் கருத்தின் நிலையையும் மாற்றி இருக்கிறார்! அன்று சொன்னது ஒன்று.. இன்று உங்கள் ஜமாத் KTM தெரு ஆக்கிரமிப்பு அகற்றவேண்டும் என்ற ஆணவ தீர்மானத்திற்கு வக்காலத்து!!
எல்லோரும் சொகுசா போய்வர இதுவரை KTM தெருவில் இருந்து பிடிங்கினது போதாது இன்னும் மிச்சம் இருபதையும் பிடுங்குங்கள் என்கிற மாதிரி KTM தெரு ஆக்கிரமிப்பை அகற்றவேண்டும் என்ற உங்கள் கோரிக்கையில் மரியாதையும் மனிதாபிமானமும் மிளிருகிறதா?
ஒரு பொய்யை திரும்ப திரும்ப கூறினால் உண்மை ஆகிவிடாது!! காவல்துறை ஆய்வாளர் அன்று மாற்றுவழியையும், ஆக்கிரமிப்பு அகற்றவேண்டும் என்று பரிந்துரைப்பதற்கு காரணம் உங்கள் தெரு வழியாக இடம் கொடுக்க மறுக்கும் பட்சத்தில்தான் என்பதையும், உங்கள் தெருவழிதான் முதன்மை வழி என்று பரிந்துரைக்கபட்டதையும் உங்கள் வசதிக்கு மறப்பதுதான் ஆரோக்கியமா? அதை சுட்டிகாட்டினால் ஆணவமா?
பல இணையதளங்களை அலசி ஆராய்ந்து கருத்து எழுவதாக காட்டிகொள்ளும் சகோ. ஹைதர், அந்த இணையதளங்களின் கூறி உள்ள KTM தெரு ஆக்கிரமிப்பு பற்றிய செய்தி என்ன என்பதாவது தெரியுமா? இல்லை தெரிந்தும் தெரியாத மாறி பாசாங்கா?.
முன்பு இரண்டு வருடங்களுக்கு முன் சில கோட்டை பால்கனி, படிகட்டுகள் போன்றவற்றை அகற்ற சொல்லி உத்தரவு போட்டார்கள், அதன்படி நாங்களும் அகற்றிவிட்டோம் அதனால் போக்குவரத்திற்கு எந்த நன்மையையும் இல்லை, சில வீட்டின் முன் அவர்கள் பாதுகாப்பிற்காக மீண்டும் தற்காலிக வேலிகள், படிகட்டுகள் அமைக்கபட்டதைதான் மீண்டும் அகற்ற வேண்டும் என்று அடையாளமிட்டு சென்றிருக்கிறார்கள். உங்கள் ஜமாத்தினர் சொல்வது போல், நீங்கள் நினைப்பது போல் KTM தெருவில் அகற்றுவதற்குரிய வேறு எந்த ஆக்கிரமிப்பும் இல்லை.
நியாயத்தின் பொருட்டு எங்கள் உரிமைக்காக விவாதிப்பது சிறந்தது என்ற அடிபடையில்தான் விவாதிக்கிறோமே தவிர நேரப் போக்கிற்கு இல்லை. உங்கள் கருத்தில் நியாமும் இல்லை ஒத்துகொள்ளும் மனப்பக்குவமும் இல்லை. இதை மறுக்க அடுத்தவரை பலிப்பது!!
இறுதியாக ஒன்று சொல்லுகிறோம், இது நானோ நீங்களோ முடிவெடுக்க கூடிய பிரச்னை இல்லை, மாறாக அதிகாரத்தில் உள்ளவர்கள் முடிவே இறுதியாக இருக்கும்? அல்லாஹ் எதை நன்மையாக நாடி இருக்கிறானோ அது கிடைக்கும்.. இன்ஷா அல்லாஹ், அது எங்கள் தெருவை பாதிப்பதாக இருந்தாலும் சரி!! அல்லாஹ்வின் நாட்டம் என்று முன்பு ஏற்றுகொண்டது போல் இனியும் ஏற்றுகொள்ள தயாராகவே இருக்கிறோம்!! எங்களிடம் பரந்த மனதும், ஊர் நலனும் இருக்கிறது.. அதை மீண்டும் மீண்டும் பல சந்தர்ப்பங்களின் நிருபித்து கொண்டிர்ப்போம்!
இது பற்றி இனி எந்த விவாதம் பண்ணியும் எந்த பலனும் நியாமும் உங்களை போன்றோர் இடம் இருந்து எதிர்பார்க்க முடியாது? அதே சமயம் எங்கள் தெருவை மீண்டும் மீண்டும் குற்றம்சாட்டும்முகமாக ஆக்கிரமிப்பு, ஆணவம் என்றல்லாம் சொல்லும்போது அதை மறுப்பதும் எதிர்ப்பதும் எங்கள் கடமை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross