செய்தி: முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையையொட்டி, பிரதமரின் தமிழக வருகையை எதிர்த்து கறுப்புக்கொடி காட்டிய விஜயகாந்த் கைதைக் கண்டித்து, தேமுதிக சாலை மறியல்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:முல்லைப் பெரியாறு அணை பிர... posted byK S Muhamed shuaib (Kayalpatinam)[31 December 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 15297
நான் தே.தி. மு. க வும் இல்லை. விஜயகாந்தின் அரசியலும் எனக்கு பிடிக்காது. என்றாலும் ஒருமாநிலம் சார்ந்த பிரச்சினைக்காக ஒரு கட்சி செய்யும் போராட்டத்தை குறை கூறுவது நியாயம் அல்ல.
கூட்டம் சேர்வது அல்லது சேர்ப்பது இதெல்லாம் அரசியல்கட்சிகளின் சிங்கடிசிங்கா வேலைகள்தான். கூட்டத்தை வைத்து மட்டும் ஒரு போராட்டத்தின் நியாங்களை கொச்சை படுத்திவிடக்கூடாது.
இன்றைக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பொதுக்கூட்டத்திற்கு பெரிய அளவில் மக்கள் சேர்வதில்லைதான். ஆனால் அவர்கள் பேசும் விஷயங்கள் யாவும் எப்படியோ மக்களை எட்டிவிடும். இரண்டுமாநிலங்களில் அவர்களின் நிர்வாகம் நடக்கிறது.
விஜயகாந்த் எப்படிப்பட்டவர் அவரது அரசியலின் தரம் என்ன என்பதை விவாதிக்க வேறு களங்கள் இருக்கின்றன. அங்கு அதை விவாதித்துக்கொள்ளலாம்.
அதுமட்டுமில்லாமல் எந்த கட்சிதான் இதுபோன்ற கூத்தை நடத்தவில்லை..? எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். கட்சிகள் நடத்தும் போராட்ட வடிவம் எல்லாம் கேளிக்குரியதுதான்.
தி.மு கவினர் அரசியல்சட்டபிரதி எரிப்பு எனசொல்லிவிட்டு பிரச்சினை என்று வந்ததும் "நாங்கள் அரசியல் சட்டத்தை எரிக்கவில்லை. காதல் கடிதத்தைத்தான் எரித்தோம் "என பல்டி அடிக்கவில்லையா..?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross