Re:ஒருவழிப்பாதை குறித்து நெச... posted byஹைதர் அலி (ரியாத்)[01 January 2012] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15333
சகோ. மஹ்மூது ஹசன் அவர்களே,
சகோ. செய்யது அஹமது அவர்களே,
சகோ. ஜாவித் நசீம் அவர்களே,
சகோ. முஹம்மது அப்துல் காதற் அவர்களே,
சகோ சீனா அவர்களே
சகோ முஹம்மது அலி அவர்களே
Assalamu Alaikkum WRWB
With due respect to all of you, I am not at all pointing to your postings. I am seeing very much maturity in many of yours and sincerity, also pain in the postings to find a solution to this long time issue.
Even though one of our brother Syed Ahamed is pointing at me by saying "மைக்கும், பதவியும் தந்தால் மட்டும் பேசுவார்கள் என்று நினைத்தோம், ", I am not having anything to say, as it is against me only. He has all the right to say against me as an individual.
சகோ. சீனா அவர்களதும் சோ. முஹம்மது அலி அவர்களதும் கருத்துக்களில் ஆக்ரோஷம் இருந்தாலும் இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு வந்து விடாதா என்ற நல்ல எண்ணத்தையும் பார்க்க முடிகிறது.
தாங்கள் இந்த ஒரு வழிப்பாதை விசயத்தில் பகரப்பாட்ட கருத்துக்களை ஊன்றி கவனித்தால் உங்களுக்கு புரிய வாய்ப்பிருக்கிறது. நான் எந்த கருத்துக்களை கடின வார்த்தைகளால் விமர்சனம் செய்திருக்கின்றேன் என்று.
பேருந்து செல்லும் வழித்தடத்தில் இருக்கும் சகோதரர்களுக்கு அவர்களுடைய உணர்வுகளை பகர முழு அதிகாரம் உள்ளது. அவர்கள் படும் சிரமும், செய்யும் தியாகமும் அதற்கான உரிமையைத்தருகிறது.
அதே நேரத்தில் மற்ற தெருவில் வசிக்கும் சகோதரர்களுடைய கருத்துக்கள், எடுத்தேன் கவிழ்த்தேன் என்றில்லாமல், சகோ. ஜாவித் நசீம், சகோ. சுலைமான் சகோ. முஹம்மது ரபீக், சகோ. செய்யது அலி சகோ. செய்யது சஹாமது புஹாரி அவர்களது கருத்துக்களை போன்று, நமது கருத்துக்களும் கோரிக்கைகளும் தெரியப்படுத்தப்பட வேண்டும் அதே நேரத்தில் உணர்வுகளும் புன்படுத்தப்படக்கூடாது, சகோதர உணர்வோடு கருத்துக்கள் தெரியப்படுத்தப்ப்பட்டால் தான் புரிதுனர்தல் ஏற்படும் என்ற எண்ணத்துடன் இருந்தால் தான் நாம் என்றென்றும் சகோதரர்களாய், ஊர் சந்திக்கும் எல்லா பிரச்சினைகளையும் (இந்த ஒரு வழிப்பாதை பிரச்சினை உட்பட) சந்திக்க உறுதுணையாக இருக்கும்.
சகோ. முஹம்மது அப்துல் காதற் அவர்கள் கேட்பது போன்று "ஏன் உங்கள் தெரு வழியாக போக்குவரத்து வந்தால் உங்கள் ஆக்கிரமிப்பு மக்களுக்கு தெரிந்து விடும் என்று பயப்பிடுகிறீர்களா?", இல்லை சகோதரரே. ஒரு வழிப்பாதை வருவதன் மூலம் தான் எங்கள் தெருவில் இருக்கும் ஆக்கிரமிப்புகள் தெரியும் என்றால், உளமார மனதார வரவேற்கிறேன். ஏனென்றால்
3195. அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) அறிவித்தார்
ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் 'எவன் அநியாயமாக ஒரு சாண் அளவு (நிலத்தை) அபகரித்துக் கொள்கிறானோ அவனுடைய கழுத்தில் ஏழு பூமிகள் அளவுள்ள நிலப்பகுதி (மறுமை நாளில்) வளையமாக மாட்டப்படும்'
ஹதீஸ்: புஹாரி Volume :3
இந்த ஹதீதை தெரிந்த எந்த ஒரு மனிதனும் அச்செயலுக்கு உடந்தையாக இருக்க மாட்டான்.
கடந்த பல வாரங்களாக பல அதிகாரிகளும் இது விசயமாக நமதூருக்கு வருகை தந்த வண்ணம் இருக்கின்றார்கள். சகோ. சீனா அவர்கலுடன் நானும் சேர்ந்து "அல்லாஹ் எதை நன்மையாக நாடி இருக்கிறானோ அது கிடைக்கும்.. இன்ஷா அல்லாஹ்," என்று பிரார்த்திக்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross